இணையத்தில் உலா வரும் இந்தப் புகைப்படம் ஒசாமா என்ற கதாபாத்திரம் அமெரிக்க ஆக்கிரமிப்பு அரசியலை நகர்த்துவதற்கு எப்படி களமாக அமைந்தது என்ற கருத்தை அழகாக சொல்லும் சிறந்த ஒரு கருத்துப்படம்.. ஒசாமா கொலை செய்யப்படுவதை வெள்ளை மாளிகையிலிருந்து ஒசாமாவும் பார்ப்பது போல் இப்படம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஒசாமா மரணம் தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்ட போலி புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியதை மறந்திருக்க மாட்டீர்கள். இந்த புகைப்படமும் அதே மாதிரி வந்திருக்கும் ஒரு புகைப்படமே. ஆனால் இதன் கருத்து வித்தியாசமானது.
