கண்கள் பூத்துபோனதே!
கர்பலாவின் கொடுமை கேட்டு
நெஞ்சு வேர்த்து போனதே!
இமாம் ஹுசைனை
இழந்த நெஞ்சம்
தீயில் வெந்து போனதே!
கர்பலாவின்
கண்ணீர்த் துளியே
நெஞ்சில் பாரமனதே!
கொடுமை நிறைந்த
கர்பலா என்
கல்பில் என்றும் ஈரமே!
(இது இலங்கை அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபன நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பான என்னால் இயற்றப்பட்ட பாடல்)
கர்பலா உன்
ஷஹாதத் காயம்
உம்மத்திற்கு பாரமே!
கர்பலாவின்
கதையை கேட்டு
கண்கள் பூத்துபோனதே!
கொடுமை கேட்டு
நெஞ்சு வேர்த்து போனதே!
கண்கள் பூத்துப்போனதே!
கல்பில் என்றும் ஈரமே!
தீனை காக்க
கொடியைத் தாங்கி
உங்கள் கைகள் உயர்ந்ததே!
தீய மனிதர்கள்
செய்த கொடுமையில்
உங்கள் தலையும் வீழ்ந்ததே!
பேரர் பூவே
களத்தில் கசங்கி
வீழ்வதா?
அந்த துயரை
மறந்து நாங்கள்
மயங்கி இன்னும் வாழ்வதா?
பூக்கள் நொந்து போனதே!
தென்றல் வெந்து போனதே!
அன்பு நபியின்
பேரர் பூவை
தீமை கொண்டு போனதே!
வஹி தந்த கிலாபத்தை (இமாமத்தை)
உலகம் இன்று இழந்ததே!
தலைமை இல்லா
அனாதை போல
உம்மத் இன்று ஆனதே!
றஸுலுல்லாஹ் (ஸல்)
தந்த ஒளியை
ஊதி அணைக்க முடியுமா?
தலைவன் இன்றி
தவிக்கும் எங்கள்
வாழ்க்கை என்று விடியுமோ?
தீமை ஒழிந்து போகுமே!
தீயில் எரிந்து போகுமே!
உண்மை எழுந்து வாழுமே!
உலகம் தன்னை ஆளுமே!
இமாம் ஹுஸைனை
இழந்த நெஞ்சம்
மீண்டும் எழுந்து ஆளுமே!
கர்பலாவின் கதையை கேட்டு
கண்கள் பூத்துபோனதே!
கர்பலாவின் கொடுமை கேட்டு
நெஞ்சு வேர்த்து போனதே!
இமாம் ஹுசைனை
இழந்து நெஞ்சம்
தீயில் வெந்து போனதே!