Showing posts with label விக்கிலீக். Show all posts
Showing posts with label விக்கிலீக். Show all posts
Wednesday, 1 December 2010
விக்கிலீக்ஸ் நிறுவனரை தேடுகிறது இன்டர்போல்!
விக்கிலீக்ஸ் நிறுவனரை தேடுகிறது இன்டர்போல்!
அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் விக்கிலீக் இணையத்தின் நிறுவனர் ஜூலியன் அச்செஞ்சியை கைது செய்யுமாறு சுவீடன் நீதிமன்றம் ஒன்று சர்வதேச காவல்துறையான இன்டர்போலுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இரண்டு பெண்கள் மீது பாலியல் குற்றம் புரிந்ததாக இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
அண்மைக்காலமாக விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையையும், உலகின் மீது அது திணிக்க முயலும் ஏகாதிபத்திய வெறித்தனத்தையும், அந்த வெறித்தனத்தால் உலகிற்கு ஏற்பட்ட விளைவுகளையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
தனது சுரண்டல் அரசியலுக்காக பல உயிர்களை அமெரிக்கா குடித்திருக்கிறது. குறிப்பாக ஆப்கான், ஈராக் போன்ற முஸ்லிம் நாடுகளை அது துவம்சம் செய்து வருகிறது. ஏகாதிபத்திய சக்திகளுக்கு துணை போகும் அரபு நாடுகள் தனது இனத்தையே கொள்ளும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்தாசை வழங்கியிருப்பதை, வழங்கவிருப்பதை விக்கிலீக்ஸ் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
எது எப்படியிருப்பினும் பாலியல் குற்றத்திற்காக விக்கிலீக்ஸ் இணையத்தின் நிறுவனர் ஜூலியன் அச்செஞ்சியை சட்டத்தின் முன் நிறுத்த இன்டர்போல் தயாராக இருக்கிறது,
அமெரிக்கா இராணுவம் இராக்கில் நிகழ்த்திவரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகளை விசாரணை செய்வதற்கு எந்த நீதிமன்றமும் இதுவரை இன்டர்போலிடம் வேண்டுகோள் விடுக்கவில்லபோலும்.
எனவே விக்கிலீக்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களை ஆராய்ந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த இன்டர்போல் எப்போது முன் வரும் என்ற கேள்வி தான் இப்போது எல்லோர் மனங்களிலும் எழுகிறது.
Subscribe to:
Posts (Atom)
ரங்க திசாநாயக்கவை கண்டு நடுங்கும் எதிர்க்கட்சிகள்
"பாண் ஒன்றைத் திருடினாலும், 'மிக்' விமானத்திலிருந்து திருடினாலும் இரண்டும் ஒரே திருட்டுதான்." இது வெறும் வார்த்தைகளாக எ...
-
22ம் திகதி காலை. 7.30 மணியிருக்கும் கொழும்பு மாளிகாவத்தை மையவாடி மயான அமைதியில் மூழ்கியிருக்கிறது. எனக்கு மிகவும் அறிமுகமானவரும், எனது நண...
-
அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிந்து போகும் ஒற்றுமையும்! அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்...
-
அமெரிக்கா ஏகாதிபத்தியம் எங்களை ஆக்கிரமிக்கிறது… ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா! ஜம்இய்யதுல் உலமா என்ற இலங்கையின் ம...