Showing posts sorted by date for query சவுதி. Sort by relevance Show all posts
Showing posts sorted by date for query சவுதி. Sort by relevance Show all posts

Saturday, 13 September 2025

நெல்சன் மண்டேலாவின் பேரன் – பாலஸ்தீன மக்களுக்காக களத்தில்....!


 

🌍✊ நெல்சன் மண்டேலாவின் பேரன் – பாலஸ்தீன மக்களுக்காக களத்தில்....!

“சுதந்திரம் என்பது எனது மக்களுக்கு மட்டுமல்ல, உலகில் அடக்குமுறையில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கும் அது உரியது” என்று தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக விளங்கிய நெல்சன் மண்டேலா ஒருமுறை கூறியிருந்தார்.

“நிறவெறியிலிருந்து தென்னாபிரிக்கா விடுதலை பெற்று விட்டது. என்றாலும், பாலஸ்தீன் விடுதலை பெறும் தினத்தில் தான் எமது இந்த விடுதலைப் போராட்டம் நிறைவு பெறும்” என்று அவா் சொன்னார்.
நெல்சன் மண்டேலாவின் பாலஸ்தீன் தொடர்பான அந்தச் சிந்தனையை, இன்று அவரது பேரன் மண்ட்லா மண்டேலா தன் செயலால் உயிர்ப்பிக்க களம் இறங்கியிருக்கின்றார்.

பாலஸ்தீனின் காஸா பகுதியில் வாழும் அந்த மண்ணின் மைந்தர்கள் இன்று கடும் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கின்றனா்.
வேறு நாடுகளில் இருந்து நாடோடிகளாக அடைக்கலம் தேடி வந்து பாலஸ்தீன் என்ற அரபு பூமிக்குள் குடியேறியவா்கள் தான் இந்த ஸியோனிஸ யூதா்கள். பிறகு பலாத்காரமாக அந்த பூமியில் உருவாக்கபட்டதுதான் இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடு.

இன்று, இஸ்ரேலின் காட்டமிராண்டித்தனமான முற்றுகையில் சிக்கி பாலஸ்தீன் மக்கள் கடும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
உணவு, தண்ணீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை இஸ்ரேலிய கொலைகார அரசு தடுத்து வருகிறது.
தனது சொந்த உறவுகள் கொடுமைக்குள்ளாகி, பசியிலும் பட்டினியிலும் மரணத்தின் விளிம்பில் தத்தளிக்கும் வேளையில்...

உலக ஆசாபாசங்களில் மூழ்கி ஸியோனிஸ எதிரிகளோடு கைகோர்த்துக் கொண்டு, உணர்வுகள் மறத்துப்போன நிலையில் மத்திய கிழக்கின் மௌட்டீக மன்னர்கா்கள் வாழ்கிறார்கள்.
உலகளாவிய ரீதியில் மதம், மொழி, இனம் என்ற எல்லைகளைக் கடந்து மனித நேயம் கொண்ட மக்கள் அனைவரும் பாலஸ்தீன் மக்களுக்காக குரல் கொடுப்பதில் இன்று முன்னணியில் நிற்கின்றார்கள், போராடுகிறார்கள்.

உலகம் முழுவதும் இலட்சக்கணக்கில் மக்கள் வீதிகளில் இறங்கி காஸா மக்களுக்காக போராடும் போது, பாலஸ்தீனத்தை சுற்றியிருக்கின்ற ஸியோனிஸ சார்பு அரபு ஆட்சியாளா்கள் இந்த கொடுமைகளைப் பார்த்து உணர்வுகள் மறத்துப்போன ஜடங்களாக இருக்கின்றனா். இது மிக மிக துா்ப்பாக்கிய நிகழ்வாகும்.
அதுமட்டுமல்லாமல், மறைமுகமாகவும், நேரடியாகவும் இஸ்ரேலிய கொடுமைக்கார நாட்டுக்கு எண்ணெய், எரிவாயு, உணவுப்பொருட்கள் என்பனவற்றை வழங்கி உதவி புரிந்தும் வருகின்றனர்.

அண்மையில், ஜொ்மன் நாட்டிலிருந்து இஸ்ரேலுக்கு 🇮🇱 கொண்டு செல்வதற்காக, நாசகார ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு இத்தாலி துறைமுகத்திற்கு வந்த சவுதி அரேபியாவின்🇸🇦 “பஹ்ரி யன்பு” Bahri Yanbu என்ற கப்பலை இத்தாலிய துறைமுக ஊழியா்கள் ‘துரத்தியடித்த’ செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன.

காஸாவில் சுமார் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பாலஸ்தீனில் குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் கடும் பட்டினியில் மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த மனித அவலத்தை ஸியோனிஸ சார்பு முஸ்லிம் நாடுகளின் தலைவா்களும், அவா்களின் எஜமானா்களும் நயவஞ்கத் தனத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனா்.

இந்தச் சூழலில் குரலற்ற பாலஸ்தீன் மக்களுக்காக களம் இறங்கியுள்ளார் மண்ட்லா மண்டேலா.
“Global Sumud Flotilla” எனப்படும் இந்த மிகப்பெரிய மனிதநேயப் பேரணியில் அவரும் பங்கேற்றுள்ளார். 44 நாடுகளில் இருந்து புறப்பட்டு வரும் 50 கப்பல்களை கொண்ட இந்தக் கப்பற்படை, காஸா மக்களுக்கு உணவு, தண்ணீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் நோக்கத்துடன் பயணமாகியுள்ளது.

இது இஸ்ரேலின் முற்றுகையைத் தகா்த்துக் கொண்டு சென்று, காஸாவில் அல்லல்படும் மக்களுக்கு உணவுப் பொருட்கள், தண்ணீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் ஒரு போராட்ட நடவடிக்கையாகும்.
பாலஸ்தீன ஆதரவு, இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்வலர்களின் கப்பல் படையில் சேர்வதற்காக டியூனிசியாவிற்கு விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக 51 வயதான மண்ட்லா மண்டேலா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

“நாங்கள் தென்னாப்பிரிக்காவில் அனுபவித்த நிறவெறி கொடுமையை விட, பாலஸ்தீனர்கள் இன்று அனுபவிக்கும்கொடுமை, துயரம் நிறைந்ததாகும்” என்று அவா் உருக்கமாகச் சொல்லி இருக்கிறார்.

நெல்சன் மண்டேலா தனது வாழ்நாளையே இனவெறி எதிர்ப்புக்கு அர்ப்பணித்தவா், அதில் வெற்றி கண்டவா். இன்று அவரது பேரன், அதே பாதையில் நடந்து, இஸ்ரேலிய அடக்குமுறைக்கு எதிராக பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார்.

உலக மக்களின் ஆதரவு பாலஸ்தீன் மக்களின் மீது திரும்புவதைக் கண்டு கலங்கிப்போயிருக்கும் இஸ்ரேலும், அதன் ஸியோனிஸ அடிவருடிகளும் பாலஸ்தீன் போராட்டத்திற்கு அதரவளிப்பவா்களை தீவிரவாதத்திற்கு துணை போகின்றவா்களாக முத்திரைக் குத்த காத்துக் கொண்டிருக்கின்றன.

அஸீஸ் நிஸாருத்தீன்
05.09.2025
8.25am

Thursday, 31 January 2013

ரிசானா விவகாரம் குறித்து மரணதண்டனைக்கு எதிரான இஸ்லாமிய படைப்பாளிகளின் கூட்டறிக்கை


இலங்கை இஸ்லாமியப் பெண்ணான ரிசானா நபீக் சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்ற நிலையில், அந்த வீட்டில் இருந்த நான்கு மாதக் குழந்தையை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவ‌ளுக்கு ஜனவரி 9ம்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கொலைக்குற்றங்களுக்கு தலை வெட்டு (Behead) தண்டனை வழக்கில் இருக்கும் ஒரு நாட்டில் அதன் தண்டனை முறைகள் அதற்கான நியாயப்பாடோடு இருக்கும் சூழலில் அதைத் தாண்டிய மனித உரிமைகள், குற்றத்தன்மை, குற்றத்தின் தர்க்கம் மற்றும் குற்றம் உருவாகும் சூழல் இவை ஆராயப்பட வேண்டும். மேலும் இஸ்லாம் போதிக்கும் ஆரம்பகால குற்றவியல் சட்டங்கள் தற்காலிக பரிகாரம் தான்; குற்றத்தை தடுப்பதற்கான ஒரு தற்காலிக தீர்வு தான். அதை விட நிரந்தரமான ஒன்று கருணையும், மன்னிப்பும் தான். மன்னிப்பு என்பதன் எதிரிணையாக தான் அது குற்றத்தை பார்க்கிறது. இஸ்லாம் இதை பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருக்கிறது.
ஆரம்பகால இஸ்லாமிய சட்டங்கள் அதற்கு முந்தைய பாபிலோனிய, சுமேரிய நாகரீகங்களின் தொடர்ச்சியே. மேலும் முறைப்படுத்தப்பட்ட நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் இல்லாத அந்த காலகட்டத்தில் நிச்சயமாக அது அப்போதைய சமூக இயங்கியலாக (Social Dialectics)தான் இருந்திருக்க முடியும். அதனால் தான் உலகின் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் அந்த சட்டங்களை பின்பற்றுவதில்லை. சில அரபு நாடுகள் ஐ.நா மனித உரிமை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளன. சவூதியில் அடிக்கடி இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கின்றன. அவையெல்லாம் இம்மாதிரி சர்வதேச அரங்குகளில் விவாதப் பொருளாவதில்லை. சில தருணங்களில் மேற்கத்தியவர்கள் குற்றங்களை செய்து விட்டு பணம் செலுத்தி தப்பிய நிகழ்வுகளும் உண்டு. ஜார்ஜ் புஷ் காலத்தில் இதுபோன்ற நிகழ்வு ஒன்று நடந்தது.
மேலும் ரிசானா விஷயத்தில் சவூதிய சட்டம் சரியான முறையில் செயல்படவில்லை. விசாரணை, குற்றத்தின் உறுதித்தன்மை பரிசோதிக்கப்படவில்லை. அவளுக்கு மொழிபெயர்ப்பு உதவிகள் மற்றும் வழக்கறிஞர் உதவிகள் சரியான முறையில் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. மேலும் அவளிடம் ஒப்புதல் வாக்குமூலத்தில் கட்டாய கையெழுத்து பெறப்பட்டிருக்கிறது. இதை அவளின் கடித வரிகள் தெரிவிக்கின்றன. 'நான் அந்த குழந்தையை கொலை செய்யவில்லை' என்றே கடைசி நிமிடம் வரை தெரிவித்துக் கொண்டிருந்தாள். (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது). மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு வரை அவளுக்கு தன் தலைவெட்டப்பட போகிறது என்பது தெரியாது. மேலும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களைத் தான் பணிப்பெண்ணாக அமர்த்த வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்படவில்லை. அவளின் வயதை உறுதி செய்வதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்க‌ வேண்டும். வெறும் பாஸ்போர்ட் வயது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது தவறு. வெளிநாட்டினர் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது அவர்களின் வயது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதற்காக தடயவியல் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். ஆனால் ரிசானா விஷயத்தில் இவை எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
மேலும் பிறந்த குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்பது இஸ்லாமிய விதி. இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுவதாக சொல்லப்படும் சவூதி அரேபிய அரசு புட்டிப்பால் ஊட்டப்பட்டதற்கான மருத்துவ காரணத்தை தெரிவிக்கவில்லை. குற்றம் நடந்தபோது அவளின் வயது 17. சவூதியில் கொலைவழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட்டு உடனடியாக தண்டனை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் ரிசானா விஷயத்தில் அது ஏழு வருடங்கள் தள்ளிப்போனது இவ்வழக்கில் மனித நியாயத்தை மேலும் வலுப்படுத்தவதாக உள்ளது. குற்றத்திற்கு ஈடாக ரத்தப்பணம் (Blood money)கொடுக்க அங்கிருந்தவர்கள் தயாராக இருந்தும் இறந்த குழந்தையின் தாய் சம்மதிக்காத காரணத்தால் இது மேலும் தள்ளிப்போனது. சவூதிய சட்டங்கள் சாசுவதமானதன் விளைவு இது.
மேலும் தண்டனைக்குள்ளாக்கப்பட்டது இலங்கைப் பெண் என்ற நிலையில் இலங்கை அரசு இதற்கான சரியான, உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் வெறும் சம்பிரதாய அளவிலே இருந்தது ராஜபக்ஷே அரசின் நடவடிக்கைகள். ஏற்கனவே போரில் லட்சக்கணக்கான தமிழர்களை குண்டு வீசி கொலை செய்து , சர்வதேச அரங்கில் குற்றவாளியாக இருக்கும் ராஜபக்ஷே எப்படி இதை கவனிப்பார்? மொழிபெயர்ப்பில் தவறு நடந்து விட்டது என்று இலங்கை அரசின் வழக்கறிஞரே குறிப்பிட்டார். ரிசானாவிற்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட தருணத்தில் அது வலுவாக மேல்முறையீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதுவும் நிராகரிக்கப்படும் போது சர்வதேச அளவில் இந்தப் பிரச்சினையை கொண்டு சென்றிருக்க வேண்டும். தன் மீதான குற்றக் கறையைப் போக்க சர்வதேச உதவியை நாடும் ராஜபக்ஷே இதற்கு தேடாமல் இருந்தது மிகப்பெரும் அவலம்.
இந்த தருணத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ரிசானாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை இந்த கூட்டறிக்கை தெரிவித்துக் கொள்கிறது. அவளின் இழப்பால் வாடும் குடும்பத்திற்கும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது. வஹ்ஹாபிய மரபுகளை பின்தொடரும் சவூதிய நிலப்பிரபுத்துவ அரசிற்கும், அவளைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்காத ராஜபக்ஷேவிற்கும் கடும் கண்டனத்தை இந்த அறிக்கை பதிவு செய்கிறது.
இவண்
தமிழ்நாடு மற்றும் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கூட்டமைப்பு 
கவிஞர் ரியாஸ் குரானா (இலங்கை) 
கவிஞர் பைசல் (இலங்கை) 
கவிஞர் அஸ்மின் (இலங்கை) 
இம்தாத் (இலங்கை) 
மஜீத் (இலங்கை) 
கவிஞர் ரிஷான் செரீப் (இலங்கை) 
கவிஞர் பஹீமா ஜஹான் (இலங்கை) 
கவிஞர் லறீனா ஹக் (இலங்கை) 
எ.பௌசர் (ஆசிரியர் எதுவரை இணைய இதழ், லண்டன்) 
கவிஞர் ஏ.ஆர். பர்ஸான் - (இலங்கை) 
ஏ.பி.எம். இத்ரீஸ் (இலங்கை) 
அப்துல் ரசாக் (எழுத்தாளர், இலங்கை) 
கவிஞர் சல்மா (சென்னை) 
கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் (தக்கலை) 
பேராசிரியர் ஹாமீம் முஸ்தபா (தக்கலை) 
எழுத்தாளர் முஜிபு ரஹ்மான் (தக்கலை) 
நாவலாசிரியர் மீரான் மைதீன் (நாகர்கோவில்) 
இடலாக்குடி ஹசன் (எழுத்தாளர்) 
குளச்சல் மு.யூசுப் (மொழிபெயர்ப்பாளர்) 
அகமது கபீர் (இலைகள் இலக்கிய இயக்கம், இடலாக்குடி) 
சம்சுதீன் (இலைகள் இலக்கிய இயக்கம், இடலாக்குடி) 
கவிஞர் பைசல் (தக்கலை) 
எச்.பீர்முஹம்மது (எழுத்தாளர், வேலூர்) 
நதீம் (மனித உரிமை ஆர்வலர், வாணியம்பாடி) 
ஆபிதீன் (எழுத்தாளர், நாகூர்) 
சதக்கத்துல்லா ஹசனீ (பதிப்பாசிரியர் அல் ஹிந்த் மாத இதழ், மதுரை) 
அன்வர் பாலசிங்கம் (எழுத்தாளர், புதுக்கோட்டை) 
பீர்முகமது (செய்தியாளர், சென்னை) 
ரபீக் இஸ்மாயில் (திரைப்பட இயக்குநர், சென்னை) 
வழக்கறிஞர் உமர் (இன அழிப்புக்கு எதிரன இஸ்லாமிய இளைஞர் இயக்கம், திருப்பூர்) 
கவிஞர் சாகிப் கிரான் (சேலம்) 
தாஜ் (எழுத்தாளர், சீர்காழி) 
வஹீதா பானு (கரூர்) 
சபீலா தஸ்னீன் (மென்பொருள் பொறியாளர், சென்னை) 
முனைவர் லைலா பானு (நாகர்கோவில்) 
அனுஷ் கான் (பதிப்பாளர், பொள்ளாச்சி) 
பைசல் மசூத் (பத்திரிகையாளர், சென்னை) 
களந்தை பீர்முஹம்மது (எழுத்தாளர், சென்னை) 
கீரனூர் ஜாகிர் ராஜா (எழுத்தாளர், சென்னை) 
சிராஜுதீன் (புத்தகம் பேசுது இதழ், சென்னை) 
அர்ஷியா (எழுத்தாளர், மதுரை) 
மௌலவி முஹம்மது ரபீக் மிஸ்பாஹி (மதுரை) 
முனைவர் அன்வர் பாஷா (திருப்பத்தூர்) 
அனார்கலி (முனைவர் பட்ட ஆய்வாளர், டெல்லி பல்கலைகழகம்) 
அமீர் அப்பாஸ் (திரைப்பட உதவி இயக்குநர், சென்னை) 
பப்பு சிராஜ் (மனித உரிமை ஆர்வலர், தக்கலை) 
அஷ்ரப்தீன் (மானுட விடுதலைக் கழகம், அருப்புக்கோட்டை) 
அமீர் (வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றம்)
***
சவுதியில் மரண தண்டனைக்கு உள்ளான ரிசானா நஃபீக் எழுதிய கடிதம்!
எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களைக் கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.
குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை, பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்தபடியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.
குழந்தையின் தாய் எஜமானி சுமார் 1-30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு குழந்தையைப் பார்த்தார். பின்னர் என்னை செருப்பால் அடித்து விட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றார். அப்போது அவர் அடித்ததில் என் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பின்னர் என்னை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர்கள் என்னை ஒரு பட்டியில் அடைத்து அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நெறித்ததாக எழுதிக் கொடுக்குமாறும், கையொப்பமிடுமாறும் மிரட்டினார்கள்.
கையெழுத்திடவில்லை என்றால் மின்சார வதை கொடுக்கப் போவதாக மிரட்டிய போது நான் பயந்து போய் அவர்களுக்கு கையொப்பமிட்டுக் கொடுத்தேன். அப்போதுதான் நான் பயங்கரமாக உணர்ந்தேன். சரியான நினைவு எனக்கில்லை, குழம்பிய மன நிலையில் கையொப்பமிட்டேன்.
அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன், நான் அக்குழந்தையின் கழுத்தை நெறிக்கவில்லை.
ரிஸானா நபீக்.
அல் த்வாத்மி சிறைச்சாலை,
அல் தவாத்மி, சவுதி அரேபியா.
நன்றி - கீற்று
ந

Thursday, 29 December 2011

பயங்கரவாதியை போராளியாக மாற்றும், போராளியை பயங்கரவாதியாக மாற்றும் அமெரிக்காவின் அவல அரசியல்!



தேவையான போது அரவணைப்பது, தேவையில்லாத போது அழிப்பது,
இதுதான் வெள்ளை மாளிகையின் வெளியுறவுக் கொள்கை!

தனது ஆதிக்க அரசியலை நிலைநாட்டுவதற்காக ஜிஹாத் என்ற போலி முலாம் பூசி, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை உருவாக்கியது.
 .
அல்காயிதாவையும் ஏனைய தீவிரவாத இயக்கங்களையும் பாலூட்டி வளர்த்த அமொிக்கா,  ஹமீத் கர்ஸாயி என்ற தனது கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் பொம்மை ஒன்றின் தலைமையில்அந்த நாட்டைக் கொண்டு வந்திருக்கிறது.

ஆப்கானை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போராடிய, தன்னால் பாலூட்டி வளர்க்கப்பட்ட அல்காயிதா உட்பட அனைத்து அமைப்புகளினதும் குரல்வளையை அமெரிக்கா அதன் கைகளாலேயே நெரித்தும் வருகிறது.

ரஷ்யாவுக்கு எதிரான ஆப்கானின் போரை மையப்படுத்தி  பாகிஸ்தானின் பெஷாவர் நகரை பயங்கரவாதத்தின் பண்ணையாக அமொிக்கா மாற்றியது. இதன் மூலம் ஆயிரக் கணக்கான இளைஞா்கள் தீவிரவாதிகளாக தோற்றம் பெற்றனா்.

அது மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலிருந்து  இஸ்லாமிய இளைஞர்கள்  இந்த ஜிஹாதிய முலாம் பூசப்பட்ட “போலி கூலிப்படை” களுக்காக அணி திரட்டப்பட்டனா். 

அமெரிக்காவின் நலன் சாா்ந்த இந்த யுத்தத்திற்காக ஆள்பலத்தை சோ்ப்பதிலும், அணி திரட்டுவதிலும், அமெரிக்க உளவு நிறுவனமான சீஐஏ, பாகிஸ்தானின் உளவு நிறுவனமான  ஐஎஸ்ஐ மற்றும் அரபு நாட்டு உளவு நிறுவனங்களுடன் இணைந்து உலகளாவிய இஸ்லாமிய அமைப்புகளும் அயராது உழைத்தன.

அமெரிக்காவால் தூண்டி விடப்பட்ட  ஆப்கான் போரும் அதன் பின்விளைவுகளுமே சமகாலத்தின் இஸ்லாத்தின் மீதான மோசமான தோற்றப்பாட்டை உருவாக்க காரணமாகியிருக்கின்றன. 

தீவிரவாதிகளை உருவாக்கி இஸ்லாத்தின் புனிதத்தைக் களங்கப்படுத்துவதற்கும், அரபு தேசங்களின் வளங்களை கொள்ளையிடுவதற்கும்  அமெரிக்கா வகுத்த வியூகம் ஆப்கானில் “ஜிஹாத்” ஆக அரங்கேற்றப்பட்டது. ஒரு கல்லைக் கொண்டு அமெரிக்கா இரண்டு பழங்களை பறித்துக் கொண்டது.

உலக அரசியலில் தலை கீழான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும்,  சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின்னா் அமெரிக்க ஏகாதிபத்தித்தின் கைகள் ஓங்குவதற்கும்  இந்த ஆப்கான் போா் ஒரு விதத்தில் வழி வகுத்தது எனலாம்.

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கும் அதன் இராணுவ அக்கிரமிப்பிற்கும் ஓர் உந்து சக்தியை இந்த “ஆப்கான் ஜிஹாத்”  அமைத்துக் கொடுத்தது. பிற்காலத்தில், இந்தப் போரின்  கதாநாயகர்களைத்  தேடி ஒழிப்பதாகக் கூறிக் கொண்ட அமெரிக்கா பல  முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமித்து, குண்டு வீசி அழித்து துவம்சம் செய்தது.

அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பு, சுரண்டல்  அரசியலை நிலை நாட்டுவதற்காகவே, 1980களில் பாகிஸ்தானை தீவிரவாதத்தின் தொட்டிலாக அமெரிக்கா மாற்றியது.   இந்த விளைவின் பாதிப்பை பாகிஸ்தான் இன்று  நன்றாகவே உணா்ந்து வருகிறது. உலக பயங்கரவாதத்தின் ஒரு குறியீடாக பாகிஸ்தான் மாற்றம் பெறுவதற்கு அமெரிக்கா வடிவமைத்த ஆப்கான் போரே அடிப்படைக் காரணமானது.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழி பாகிஸ்தானுக்கு இன்று சரியாக பொருந்திப் போகிறது.

அமெரிக்கா போன்ற ஒரு நாட்டின் ஏகாதிபத்திய அரசியல் தேவைகளுக்காக, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக விதைக்கப்பட்ட  தீவிரவாதம், இன்று ஒரு விஷ விருட்சமாக பாகிஸ்தானில்  வளா்ந்திருக்கிறது.   ஜனநாயகத்தின்  அடிப்படைகளை தகா்க்கும் அளவிற்கு அங்கு  தீவிரவாதம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.

பாகிஸ்தான் மக்களுக்கு தீவிரவாதத்தை அரசியல் பாலாக ஊட்டிய  அதன் ஆட்சியாளா்களையே இன்று பதம் பாா்க்கும்  அளவிற்கு அது மாறியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல்,  ஏகாதிபத்தியத்தின் எடுப்பாா் கைப்பிள்ளையாக இருந்த பாகிஸ்தானை  அமொிக்காவும் சோ்ந்து இப்போது பதம் பார்க்க ஆரம்பித்திருக்கிறது.

அமெரிக்காவால் எந்த நேரத்திலும் எதுவும் செய்ய முடியுமான ஓர் இறையாண்மையற்ற ஒரு நாடாக பாகிஸ்தான் சீர்குலைந்திருக்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் 'வெளியுறவு' அரசியல் அகராதியில் நீண்ட நாள் நண்பனுமில்லை, நீண்ட நாள் எதிரியுமில்லை என்ற நியதி நேர்த்தியாக பின்பற்றப்படுகிறது. 

பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட,  அமெரிக்க அரசியல் நலன் சாா்ந்த ஜிஹாதிய பண்ணையில் புடம் போடப்பட்ட உஸாமா பின் லாதின், லிபியாவின் ஹாகிம் பில் ஹஜ் போன்றோா்  அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியல் காய் நகர்த்தலுக்காக எவ்வாறு பயன்படுத்தப்பட்டார்கள் என்பதை நாம் இன்னும் உணராமலேயே இருக்கிறோம்.

அமெரிக்காவின் அரசியல் தேவைக்காக லிபியாவை சின்னாபின்னப்படுத்திய  அப்துல் ஹாகிம் பில் ஹஜ் என்பவரைப் பற்றி எங்களில் எத்தனைப் பேருக்குத் தொியும்?

அப்துல் ஹாகிம் பில் ஹஜ்!

கதாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு திரிப்போலியின் இராணுவ தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் இந்த பில் ஹஜ் லிபியாவின் அல்காயிதா அமைப்பின் தற்போதைய தலைவர் ஆவாா். இவர் 1966ம் ஆண்டு  திரிப்பொலியில் பிறந்தவர்.

அல்காயிதா அமைப்பின் முக்கிய உறுப்பினராக அறியப்பட்ட இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ். ஆப்கான் போராட்டத்திற்காக பாகிஸ்தான் பெஷாவரைத் தளமாகக் கொண்டு இயங்கிய “ஜிஹாதிய பண்ணையில்” அமெரிக்கா சீஐஏ மற்றும் பாகிஸ்தானிய உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ இனால் மிகவும் திட்டமிட்டு  வளர்த்தெடுக்கப்பட்ட  ஒரு தீவிரவாதி!.

1980களில் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யப் படையை விரட்டுவதற்காக வேண்டி சவூதி அரேபிய “பெட்ரோ டொலா்” நிதி மூலங்களால் நிர்வகிப்பபடுகின்ற இஸ்லாமிய இயக்கங்களின் உதவியினால், 'ஜிஹாத்' போராட்டப் பயிற்சிக்காக,  பாகிஸ்தானுக்கு பலி கடாவாக கொண்டு வரப்பட்ட  ஒருவர்தான் இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ் .

சவுதி முதலாளியத்தின் அடையாளமாகவும்,  கட்டட வணிகத்தின் பெரு விருட்ஷமாகவும், அமெரிக்க ஜனாதிபதிகளான புஷ் குடும்பத்தின் நெருங்கிய சகாவாகவும் இருந்த பின் லாதீன் குடும்பத்திலிருந்து உருவான  ஒசாமா பின் லாதீனுக்கும் அப்துல் ஹாகிம் பில் ஹஜ்ஜுக்கும் இடையிலான  தொடர்பு பாகிஸ்தானில் தான் ஏற்பட்டது.

இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள , அல்காயிதாவுடன் தொடா்புடைய  Libyan Islamic Fighting Group (LIFG)  லிபிய இஸ்லாமிய போராட்டக் குழுவின் தலைவராவார்.

அமெரிக்காவின் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் வரிசையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அடுத்ததாக 28 வது வரிசையில் அப்துல் ஹாகிம் பில் ஹஜ் உடைய லிபிய போராட்டக்குழுவின் Libyan Islamic Fighting Group (LIFG) பெயரே குறிக்கப்பட்டு இருக்கிறது.

தனது நாட்டினால் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் தலைவரான ஹாகிம் பில் ஹஜ்ஜை, லிபிய போராட்டத்தில் முன்னணி வீரராக  இன்று அமெரிக்க ஊடகங்கள் புகழ்ந்து பாராட்டி வருகின்றன.

வேடிக்கை என்னவென்றால், ஆப்கானிஸ்தானில் அல்காயிதாவிற்கு எதிராக யுத்தம் செய்கின்ற நேட்டோ படைகள், லிபியாவில் அல்காயிதாவோடு ஓரணியில் இணைந்து கதாபிக்கு எதிராக யுத்தம் செய்து வருகின்றன.

இதிலிருந்து அல்காயிதா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு ஒரு போலி அரசியல் நாடகம் என்பது தெளிவாகப் புரிகின்றது.

சதாம் ஹுஸைனுக்கும், கதாபிக்கும் எதிராக அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டி வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். 

2001 செப்டம்பா் 11 தாக்குதலுக்குப் பின்னா் லிபியாவும், ஈராக்கும் அல்காயிதா தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதாக,  அமெரிக்கா மொட்டைத் தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சு போடும் ஒரு போலி குற்றச்சாட்டை முன் வைத்து அந்த இரண்டு நாடுகளையும் அச்சுறுத்தியது. 

இரட்டைக் கோபுர தாக்குதலில் கலந்து கொண்ட 19 பேரில் ஈராக்கிய, லிபிய பிரஜைகள் யாரும் இருக்கவில்லை. ஆனால் தாக்குதலில் நேரடியாக தொடா்பு பட்டவா்களில்  15 பேர் சவுதி பிரஜைகளாவா்.  வேடிக்கை என்னவென்றால், இது விடயமாக சவுதியை கண்டிக்காத அமெரிக்கா ஈராக்கையும், லிபியாவையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் முன் வந்தது. 

இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தே அந்நாடுகளுக்கான ஆக்கிரமிப்பை ஐ.நா சபையும் நியாயப்படுத்தியது.

ஆனால் அல்காயிதா என்ற அமைப்பிற்கும் சதாம் ஹுஸைனுக்கோ, லிபிய தலைவா் முஅம்மா் அல் கதாபிக்கோ எவ்வித உறவும் இருந்தில்லை. எதிரும் புதிருமான அரசியல் தளங்களைக் கொண்ட அல்காயிதாவையும், கதாபி - சதாம் அணியையும் ஒன்றிணைத்து முடிச்சுப் போடுவதில் மேற்குலக ஊடகங்கள் வெற்றி கண்டன.

சதாமும், கதாபியும் அல்காயிதா அமைப்பின் பரம எதிரிகளாவர். அமெரிக்க அரசியல் நிகழ்ச்சி நிரலின் தேவைக்காக உருவாக்கப்பட்ட அல் காயிதா போன்ற தீவிரவாத கொலைக்கும்பல்களை அழிக்கின்ற, ஒடுக்குகின்ற ஒரு அரசியல் நிலைப்பாட்டிலேயே கடந்த காலங்களில் சதாமும், கதாபியும்  இருந்திருக்கின்றார்கள்.

அல்காயிதாவோடு தொடா்பு வைத்திருப்பதாய் யாரையெல்லாம் அமெரிக்கா போலியாக குற்றம் சாட்டியதோ, அந்த நாடுகளை வீழ்த்துவதற்கு,  இன்று அல்கைதாவையே ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும்  ஓர் அவல அரசியலை அமொிக்கா செய்து வருகின்றது.

சமகால நிகழ்வுகளைப் பார்க்கும் போது அல்காயிதாவுக்கும் அமெரிக்காவிற்கும் உள்ள அடிப்படை உறவு அம்பலத்திற்கு  வந்திருக்கிறது.

அப்துல் ஹாகிம் பில் ஹஜ் ஆப்கானின் போராட்டத்தின் பின்னர் அதே நிகழ்ச்சி நிரலோடு லிபியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  லிபியாவில் அல்காயிதாவின் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அமெரிக்காவோடு முறுகல் நிலையிலிருந்த கதாபிக்கு எதிரான போராட்டத்தை இவர் ஆரம்பித்தார். மூன்று தடவை கதாபியை கொல்ல இவர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், அல்காயிதாவை கடுமையான முறையில் அடக்குவதற்கு கதாபி முடிவெடுத்தார். கதாபியின் கடுமையான நெருக்குதல் காரணமாக அல்காயிதா உறுப்பினர்கள் லிபியாவை விட்டு ஓட்டமெடுத்தனா். அவா்களை ஏவி விட்ட அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் தேடினர்.

அப்துல் ஹாகிம் பில் ஹஜ் 2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அரசியல் தஞ்சமடைவதற்காக பிரித்தானியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்த போது மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு அமெரிக்க உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ. இடமும், பிரித்தானிய உளவு நிறுவனமான எம். 16 இடமும் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த இரண்டு உளவு நிறுவனங்களும் பில் ஹஜ்ஜை லிபியாவிடம் ஒப்படைத்தது. லிபியாவில் மூன்று நாட்டு உளவாளிகளினாலும் பலத்த சித்திர வதைகளுக்கு ஆளானதாக அண்மையில் ஹாகிம் பில் ஹஜ்  ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் இருக்கும் அல்கைாயிதா உறுப்பினர்களை காட்டிக்கொடுக்குமாறு லிபியாவின் உளவுத் துறை தலைவரான தற்போது பிரித்தானியாவில் இருக்கும் மூஸா கூஸா தன்னிடம் வேண்டியதாகவும், அப்படிக் கூறும் பட்சத்தில் தனக்கு சித்திரவதைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று அவருக்குக் கூறப்பட்டதாகவும் அப்துல் ஹாகிம் பில் ஹஜ் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

பல ஆண்டுகள் லிபிய சிறையிலிருந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ்ஜை, 2010ம் ஆண்டு மார்ச் மாதம் கதாபியின் மகன் சைபுல் இஸ்லாம்  விடுதலை செய்தாா். இதன் போது 700 அல்கைதா உறுப்பினர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனா்.   விடுதலையின் பின்னர் அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தமது விடுதலைக்கு ஒத்துழைத்த கதாபியின் மகன் சைபுல் இஸ்லாத்திற்கு நன்றி பாராட்டுவதாக பில் ஹஜ் கூறினார்.

இது தொடர்பாக சைபுல் இஸ்லாமும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போது “  இந்த அல்கைதா அங்கத்தவர்களால் இனியும் நாட்டிற்கு தீங்கு கிடையாது என்று தாம் நம்புவதால் அவர்களை விடுதலை செய்ததாக” அறிவித்தார்.

ஆனால் இவர்களின் விடுதலையின் சுமார் ஒரு வருடங்களின் பின்னர் லிபியாவின் தலையெழுத்தையே மாற்றுவதாய் இந்நிகழ்வு அமையும் என்று கதாபியோ, அவரின் மகன் சைபுல் இஸ்லாமோ கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

கடந்த வருடம் மத்திய கிழக்கின் மக்கள் எழுச்சியொடு எழுந்து கொண்ட இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ் திரிப்பொலியில் ஆரம்பமான கதாபிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை மெதுவாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

அமெரிக்காவினால் பயங்கரவாதியாக லிபியாவிற்கு பிடித்துக் கொடுக்கப்பட்ட அதே அப்துல் ஹாகிம் பில் ஹஜ்ஜை வைத்து லிபிய போராட்டத்தை மேற்குலகு மக்கள் மயப்படுத்தியது. 

தனது நிகழ்ச்சி நிரலில் பயங்கரவாதியாக இருந்த இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ்ஜை சுதந்திர போராளியாக மேற்கின் ஊடகங்கள் சித்தரித்துக் காட்டின.

மக்கள் எழுச்சியை தனது வழமையான அடக்குமுறை அணுகுமுறையால் நசுக்க முயன்ற கதாபிக்கு எதிராக தருணம் பார்த்திருந்த மேற்குலக நாடுகள் தடைகளுக்கு மேல் தடைகளை விதித்தன.   நேட்டோ படைகளின் வான் படைத்தாக்குதல்களைத் தொடுக்கப்பட்டன. 

இந்த நேட்டோவின் உதவியின் மூலம் திரிப்போலி நகரை  அப்துல் ஹாகிம் பில் ஹஜ் கைப்பற்றினார்.   லிபியாவின் வீழ்ச்சிக்கு மேற்குலகின் உதவியும், அல்கைதா உறுப்பினர்களினது போராட்டமும் காரணமாக அமைந்தன. 

பலஸ்தீன் பூமியை அபகரித்து ஏழு தசாப்தங்களுக்கு மேலாக அக்கிரமம் புரியும்,  இஸ்ரேலுக்குக் காட்டாத எதிர்ப்பை கதாபிக்கு காட்டும் அளவிற்கு முஸ்லிம்கள் மேற்குலக ஊடகங்களினாலும், பெட்றோ டொலா்களினால் போஷிக்கபடும் இஸ்லாமிய இயக்கங்களினாலும்,  எகாதிபத்தியத்தின் எடுபிடிகள் வழங்கிய  மாா்க்கத் தீா்ப்புகளினாலும்  மூளைச் சலவை செய்யப்பட்டார்கள்.

கதாபியின் சர்வாதிகார தன்மை தொடா்பில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. ஆனால் அவரை  ஒத்த அடக்குமுறை ஆட்சியாளர்கள் மத்திய கிழக்கில் அதிகம்  பேர் இருக்கும் நிலையில் கதாபியை மட்டும் கொடுமைக்காரராகவும், சா்வாதிகாரியாகவும்  சித்தரிக்கும் ஏகாதிபத்திய வாதிகளின் சதி வலையில் முஸ்லிம்கள் சிக்கவைக்கப்பட்டார்கள்.

அப்துல் ஹாகிம் பில் ஹஜ் இப்போது அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் லிபியாவின் ஒரு விடுதலைப் போராளி!   

நாளை.....?  வெள்ளை மாளிகை என்ன சொல்லப் போகிறதோ..!
பொறுத்திருந்து பாா்ப்போம்!

Tuesday, 17 May 2011

உயிர் வாழும் ஒசாமா?


இணையத்தில் உலா வரும் இந்தப் புகைப்படம் ஒசாமா என்ற கதாபாத்திரம் அமெரிக்க ஆக்கிரமிப்பு அரசியலை நகர்த்துவதற்கு எப்படி களமாக அமைந்தது என்ற கருத்தை அழகாக சொல்லும் சிறந்த ஒரு கருத்துப்படம்.. ஒசாமா கொலை செய்யப்படுவதை வெள்ளை மாளிகையிலிருந்து ஒசாமாவும் பார்ப்பது போல் இப்படம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஒசாமா மரணம் தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்ட போலி புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியதை மறந்திருக்க மாட்டீர்கள்.  இந்த புகைப்படமும் அதே மாதிரி வந்திருக்கும் ஒரு புகைப்படமே. ஆனால் இதன் கருத்து வித்தியாசமானது.

Monday, 21 March 2011

அரபு சுல்தான்களும் அமெரிக்க ஷைத்தான்களும் அடிவருடி மஸ்தான்களும்



அமெரிக்கா மற்றுமொரு படுகொலை ஆக்கிரமிப்பிப்பை ஆரம்பித்திருக்கிறது. சதாமை ஒழித்த அதே பாணியிலான நாடகம் லிபியாவில் அரங்கேறிவிட்டது. அந்த ஆக்கிரமிப்பிற்கான பச்சைக் கொடியை பத்வாவாக அதன் அடிவருடி களினால் வழங்கப்பட்டும் விட்டது.

லிபியாவின் எண்ணெய் வளத்தை சூறையாட எதிரிகள் அணிதிரண்டு விட்டனர். வளங்களை கொள்ளையிடும் ஆதிக்க சக்திகள் உலக ஊடகங்களை திசை திருப்ப உள்நாட்டுப் போர் ஒன்றை உடனே அங்கு உருவாக்கியும் விடுவார்கள்..

அங்கு இனி குண்டு வெடிப்புகளும் தற்கொலைத் தாக்குதல்களும் சகஜமாய் நடக்கும் சம்பவமாய் மாறிப்போகும்.

சொந்த நாட்டுக்குள்ளேயே பிரிவுகளை உருவாக்கி ஒருவரை மற்றவர் குதறித் தின்னும் ஜிஹாதிய வெறியை ஊட்டி இரத்தத்தால் அந்த மண்ணை ஈரமாய் ஆக்கும் பத்வாக்கள் மீண்டும் மீண்டும் காற்றில் பறக்க விட பலர் காத்து நிற்கின்றார்கள்.

இதுதான் அமெரிக்காவின் எதிரிக்கு, எதிரிகள் ஆளும் நாடுகளுக்குக் கிடைக்கும் பரிசு!

ஆப்கானிஸ்தானில், ஈராக்கில், செச்னியாவில், பொஸ்னியாவில் நடந்து முடிந்த நரவேட்டைகளின் அடுத்த நகர்வு லிபியாவை நோக்கியிருக்கிறது. மேற்சொன்ன நாடுகள் அத்தனையும் அமெரிக்காவின் சுரண்டலுக்காகவும் அரசியல் தேவைகளுக்காகவும் துவம்சம் செய்யப்பட்ட தேசங்கள்.

ஆப்கானிஸ்தான் அரசு ரஷ்யாவை சார்ந்திருந்து அதன் இராணுவ உதவியை வேண்டி நின்ற போது, ரஷ்யப்படைகள் ஆப்கானுக்குள் நுழைந்தன. ரஷயப் படைகளுக்கு பாடம் கற்பிக்கவும், ஆப்கானை ஆக்கிரமிக்கவும் அமெரிக்கா வியூகம் வகுத்தது.

ஏகாதிபத்தியத்தின் எடுப்பார் கைப்பிள்ளையான முல்லாக்களை வைத்து அமெரிக்கா மார்க்கத் தீர்ப்புகளை வெளியிட வைத்தது.

யூசுப் அல் கர்தாவி ரஷ்ய படைகளுக்கு எதிராக போராடுமாறு முஸ்லிம்களுக்கு அறைகூவல் விடுத்தார். அந்த நாட்டின் சிறுவர் முதல் பெரியோர் பெண்கள் உட்பட அனைவரும் இராணுவ மயப்படுத்தப்பட்டனர்.  ரஷயா விரட்டியடிக்கப்பட்டதும்.  போராளிகளுக்கிடையில் பிணக்குகளைத் தோற்றுவித்து சீ.ஐ.ஏ ஆப்கானைக் கைப்பற்றிக்கொண்டது.

கர்தாவியின் பத்வாவை நம்பி களத்தில் குதித்த முஜாஹிதீன்களுக்கு, அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தது. வெற்றியின் பின்னர் ஆப்கான் தேசம் அமெரிக்காவிற்கு கைமாறியது. கர்தாவி அமைதியானார்.

அன்று ஆப்கானிலிருந்து ரஷ்யாவை விரட்ட கூக்குரலிட்ட கர்தாவி இன்று அங்கிருந்து அமெரிக்காவை விரட்ட ஜிஹாதை பிரகடனம் செய்யாமல் மௌனம் காக்கிறார்.

இன்று அந்நாட்டு சிவிலியன்கள் நாளுக்கு நாள் கொலை செய்யப்பட்டுக கொண்டிருக்கின்றனர்.

எகிப்தின் போராட்டத்தை ஏற்றுக்கொண்ட கர்தாவி, பஹ்ரைன் போராட்டத்தை எற்றுக்கொள்ள மறுக்கின்றார்.  அதற்கு முக்கிய காரணம் வளைகுடாவில் அமெரிக்காவிற்கு முக்கியமான தளமாக பஹ்ரைன் திகழ்வதாகும்.

அமெரிக்காவின் மிகப்பெரிய படைத்தளம் பஹ்ரைனில் இருக்கிறது. பஹ்ரைனை இழக்க அமெரிக்கா ஒரு போதும் தயாரில்லை. எனவே கர்தாவி அவரது பத்வா பல்டியை மாற்றி அடித்துள்ளார். பஹ்ரைன் போராட்டம் மக்களின் போராட்டம் இல்லையென்று அமெரிக்காவை அவர் ஆறுதல் படுத்தியிருக்கிறார்.

காஸாவுக்குள் புகுந்து 1400 மக்களைக் கொன்ற இஸ்ரேலுக்கு எதிராக எதுவுமே செய்யாத சவுதி அரேபியா, இன்று தனக்கும் அமெரிக்காவுக்கும் சாதகமாக இருக்கும் பஹ்ரைனைப் பாதுகாக்க தனது இராணுவத்தை அங்கு அனுப்பியிருக்கிறது. கத்தார் நாடு இஸ்ரேலோடு கொஞ்சி குலாவுவதை மௌனமாக பார்த்திருக்கும் கர்தாவி, கதாபியைப் பார்த்து கர்ஜிக்கிறார்.

சுருங்கச் சொன்னால் பூகோள அரசியல் ஒன்றிற்காக முஸ்லிம் தேசங்கள் உள்நாட்டு வெளிநாட்டு யுத்தங்களால் சிதைக்கப்படுகின்றன. ஆக்கிரமிக்கப்படுகின்றன.

காட்டிக்கொடுத்து, எதிரிகளுக்கு கூஜா தூக்கும் கோடரிக்காம்புகளாக கர்தாவிகளும், அப்துல்லாஹ்க்களும் அணிவகுத்து நிற்கின்றனர்.

Sunday, 20 February 2011

பஹ்ரைன் - வெளிநாட்டு கூலிப்படையின் கொடுமை!


பஹ்ரைன் விபரீதமான அரசியல் உள்ள வித்தியாசமான நாடு.

ஏகாதிபத்தியத்தின் எடுப்பார்க் கைப்பிளள்ளைகளான மன்னர் குடும்பங்கள் 200 ஆண்டுகளாக அந்த நாட்டை ஆண்டு வருகின்றார்கள்.

அந்த நாட்டின் அரச நிர்வாகத்தில் சொந்த நாட்டுப் பிரஜைகளுக்கு இடமில்லை. அமெரிக்காவும் பிரித்தானியாவும் சவுதி அரேபியாவும் தமது அரசியல் தேவைகளுக்காக பயன் படுத்தும் ஒரு தளமாகவே பஹ்ரைன் பாவிக்கப்பட்டு வருகின்றது.

வெளிநாட்டவரின் அங்கீகரிக்கப்பட்ட ஆக்கிரமிப்பின் உதவியில் ஆட்சி செய்யப்பமடும் ஒரு நாடாக பஹ்ரைனை குறிப்பிட்டால் அதில் தவறே இல்லை.

உலகில் எங்குமில்லாதவாறு முற்று முழுதாக இராணுவத்தில் வெளிநாட்டவர்களே வேலைக்கமர்த்தப்படுகின்றனர்.

மனித உரிமைகள் முடக்கப்பட்ட ஒரு நாடாக அது மிளிர்ந்துக் கொண்டிருக்கிறது.

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால்,

இன்று மனித உரிமைக்காக குரல் கொடுக்கின்ற அமெரிக்காவும், பிரித்தானியாவும் தான் பஹ்ரைன் என்ற ஜனநாயக விரோத நாட்டை பாலூட்டி வளர்த்து வருகின்றன.

வாக்குரிமையைப் பற்றி வாய்க்கிழிய கத்தும் இந்த நாடுகள், 80 வீதமான ஆதிகாரத்தை தன்னகத்தே வைத்துக்கொண்டு 20 வீத அதிகாரத்தை இந்த நாட்டு மக்களுக்கு வழங்கும் கேலிக்குரிய பஹ்ரைன் பாராளுமன்ற முறையை ஆதரித்து வருகின்றன.

அண்டை நாடுகளான பஹ்ரைனுக்கும் சவுதிக்குமுள்ள உறவு மிகவும் இறுக்கமானது. ஈ என்ற அசுத்தத்தை மொய்க்கும் பிராணிக்கும் அசுத்தத்திற்கும் உள்ள உறவு அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருக்கிறது.

தனது நாட்டில் இறுக்கமான சட்டங்களை வைத்துக்கொண்டுள்ள சவுதி நாடு, அதன் மன்னர் குடும்பங்களுக்கும், மேட்டுக்குடிகளான எண்ணெய் ஷேக்குகளுக்கும் மது, மாது போன்ற ஷைத்தானிய சேட்டைகளுக்கான சிறந்த தளமாக பஹ்ரைனை பாவித்து வருகிறது.

பிரித்தானியா கூலிப்படையான பஹ்ரைனின் இராணுவத்திற்கு பயிற்சி வழங்குகிறது. அமெரிக்கா 4500 படையினரைக் கொண்ட மிகப்பெரிய கடற்படைத் தளத்தை இங்கு வைத்துள்ளது.

பஹ்ரைன் நாட்டு மக்களின் அரசியல் உரிமைகளை நசுக்குவதற்கு ஏதுவாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் அந்த நாட்டை நவீன ஆயுத வல்லமையுள்ள நாடாக மாற்றியிருக்கிறது.

பஹ்ரைனை நாட்டு மக்களின் ஆதரவு அறவே இன்றி பல நூறு ஆண்டுகள் தொடராக ஆட்சி செய்வதற்கு அடித்தளமாக இந்த சாத்தானிய சக்திகளான அமெரிக்கா, பிரித்தானியா, சவூதி போன்ற கூட்டுக்கம்பனிகள் அந்த நாட்டின் அராஜகங்களை கட்டிக்காத்து வருகின்றன.

இன்று அந்த நாட்டில் எழுந்து வரும் மக்கள் எழுச்சியை முடக்குவதற்கு மேல் குறித்த மூன்று சாத்தானிய சக்திகளும் முயன்று வருகின்றன.

நிராயுதபாணிகளாக ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது கூலிப்படையான இராணுவம் செய்யும் கொலைகளுக்கும் , மனித உரிமை மீறல்களுக்கும் அனுசரணையாளர்கள் யார் என்ற விடயம் உலகிற்கு தெரிய வந்திருக்கிறது.

Saturday, 19 February 2011

எழுச்சியில் பஹ்ரைன் - அதிர்ச்சியில் அமெரிக்காவும் அரபுநாடுகளும்


எகிப்தின் எழுச்சியை வரவேற்று அந்த எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா பஹ்ரைன் எழுச்சியைக் கண்டு மிரண்டு போயுள்ளது. பஹ்ரைனின் எல்லை நாடான சவுதி நாட்டின் மன்னன் அப்துல்லாஹ்வின் வயிற்றிலும் இது புளியைக் கரைத்திருக்கிறது.

புரட்சி தனது நாட்டிற்குள்ளும் புகுந்து விடுமோ என்று அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வால்பிடிக்கும் சவுதி மன்னர் குடும்பங்கள் நடுநடுங்கிப்போயுள்ளன.

Tuesday, 8 February 2011

எகிப்தின் ஒமர் சுலைமான் ஒரு மொசாட் ஏஜன்ட் ! விக்கிலீக் அம்பலம்


எகிப்தின் தற்போதைய பதில் ஜனாதிபதியாக முபாரக்கினால் நியமிக்கப்பட்டுள்ள ஒமர் சுலைமான் 2008ம் ஆண்டு அப்போதைய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த எஹுத் பராக் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்றும் முபாரக்கிற்கு அடுத்தபடியாக எகிப்தின் தலைமைத்துவத்தை ஏற்க இவர் தகுதியானவர் என்று இஸ்ரேல் இவரை சிபார்சு செய்திருப்பதாகவும் விக்கிலீக் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிப்பதாக பிரித்தானிய டெய்லி டெலிகிராப் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

Monday, 7 February 2011

எகிப்தை நோக்கி விரைகிறது அமெரிக்க போர்க்கப்பல்!

800 படையினரை ஏற்றிக்கொண்டு அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று எகிப்தை நோக்கி விரைவதாக பிரஸ் ரீவி இணைய தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

எகிப்தை ஆக்கிரமிக்க அமெரிக்கா தயாராகிறது என்று பரவிவரும் செய்தியை மறுத்துள்ள பென்டகன் எகிப்தில் பிரச்சினை உக்கிரமடைந்தால் தனது நாட்டு பிரஜைகளை எடுத்துச் செல்லவே இந்தப் போர்க்கப்பல் அனுப்பப்படுவதாக அறிவித்திருக்கிறது.

எகிப்தின் மக்கள் எழுச்சியோடு, மத்திய கிழக்கில் தனது பிடி தளர்ந்து வருவதை உணர்ந்துள்ள அமெரிக்கா தனக்கு விசுவாசமான, சவுதி, குவைத், கத்தார் போன்ற ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளைப் பின்பற்றும்,அவர்களின் அனுசரணையில் வாழும் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களை பொம்மைகளாக எகிப்தில் ஆட்சி பீடமேற்றும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

முபாரக்கின் வீழ்ச்சியோடும், எகிப்தின் மக்கள் எழுச்சியோடும் கதி கலங்கிப் போயிருக்கும் இஸ்ரேலின் நிலையைப் பார்க்கும் போது,  மத்திய கிழக்கு அரபு நாடுகளின் ஆதரவு, உதவியின் மூலம் தான் அது தன் இருப்பை பாதுகாத்து வந்திருக்கிறது என்ற உண்மை உலகறிய வந்திருக்கிறது. அதன் மூலம்தான் பலஸ்தீன் மக்கள் மீதான அடாவடித்தனங்களையும், அட்டகாசங்களை அரங்கேற்றி வந்திருக்கிறது என்ற உண்மையும் புலனாகின்றது.

மத்திய கிழக்கைப் பொறுத்தவரை அந்த நாடுகளில் ஆட்சி செய்பவர்கள் மன்னர்களாகவும், சர்வாதிகாரிகளாகவும் இருப்பது அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் விருப்பமானதாகும். மக்களால் தெரிவு செய்யப்படும் அரசாங்கங்கள் அங்கு உருவானால் அவர்களின் ஆக்கிரமிப்பு, சுரண்டல் அரசியலுக்கு அது பெரும் தடையாக அமையும்.

அந்த மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சி என்ற சாதகமான அரசியல் சூழ்நிலை அரபு நாடுகளில் தற்போது சரிந்து வருவதால் அமெரிக்காவும் இஸ்ரேலும் அதிர்ந்து போய் இருக்கின்றன. 

Sunday, 6 February 2011

சவுதி அரேபியா : சிறைவாசிகளை விடுவிக்கக்கோரி அணிதிரளும் பெண்கள்


சவுதி அரேபியாவில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடையிருந்த போதிலும் மத்திய ரியாதிலுள்ள சவுதி உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னால் சனிக்கிழமை அணிதிரண்ட பெண்கள் எவ்வித விசாரணையுமின்றி பல வருடங்களாக சிறையில் வாடும் தமது உறவினர்களை விடுவிக்குமாறு சவுதி அரசை கோரியிருக்கின்றனர். ஏஎப்பி செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

இஸ்லாமிய மதத்சட்டதின் போர்வையில் மனித உரிமையை மிக மோசமாக மீறும் நாடான சவுதியில் மன்னர்களுக்கும், அமெரிக்காவிற்கும் எதிராக குரல் கொடுப்பவர்கள் எவ்வித விசாரணையுமின்றி சிறையில் தள்ளப்படுகின்றனர்.

 மனித உரிமை அமைப்பான Human Rights Watch  தனது வருடாந்த அறிக்கையில்  சவுதியில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் அநீதியான முறையில் சிறையில் அடைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

ஏகாதிபத்தித்தின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படும் சவுதி அரசு, கடந்த காலங்களில் அமெரிக்காவோடு இணைந்து ஜிஹாத் போராட்டம் என்ற ரீதியில் அமெரிக்காவிற்கு எதிரான நாடுகளில் ஆயதப்போராட்டங்களை உருவாக்கியது. இதில் ஆப்கான், செச்னியா, பொஸ்னியா, காஷ்மீர் போன்ற நாடுகளின் போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.

இஸ்லாம் விரும்பாத பாதக செயல்களில் ஈடுபடும் அல்கைதா, தாலிபான்  போன்ற அமைப்புகள்  நூற்றுக்கு நூறு சவுதியும், சீஐஏ யும் இணைந்து பிரசவித்தவையாகும்.

இன்று சவுதி மக்கள் மன்னர்களின் இந்த இஸ்லாத்திற்கு முரணான செயற்பாட்டை உணர்ந்து வருகின்றார்கள் என்பதையே இந்தப் பெண்களின் பேரணி உணர்த்துகிறது.

அப்துல்லாஹ் !
அடுத்த
புரட்சியின் கைகள்
தட்டும் கதவு
உன்னுடையதாக இருக்கலாம்!
புறப்பட தயாராய் இரு!

Friday, 7 January 2011

வர்த்தக மயமான ஹஜ்ஜும் வலிகளோடு மீண்டுவந்த ஹாஜிகளும்!!

இலங்கையிலிருந்து மக்கா சென்ற ஹாஜிகள் பட்ட இன்னல்களை முறைப்பாடுகளாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு அதன் பணிப்பாளர் ஹாஜிகளை வேண்டியிருந்தார். அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்படொன்றின் பிரதியொன்று நவமணி பத்திரிகைக்கும், பத்ர்களத்திற்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.


இலங்கையில் வர்த்தகயமமாக மாறிக்கொண்டிருக்கும் ஹஜ் பிரயாணம், பணத்தை குறியாக வைத்து இயங்குகின்ற ஒருசில ஹஜ் முகவர்கள், ஊடகங்களில் ஹஜ் உம்ராவிற்கு கிடைக்கின்ற அதீத விளம்பரம் போன்றவை ஹஜ்ஜின் மகத்துவத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது என்பதனை இந்த ஹாஜியின் முறைப்பாடு தெளிவாக காட்டுகிறது.சில மோசடி ஹஜ் முகவர்கள் ஊடகங்களில் சிறப்பான வசதிவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக பொய் வாக்குறுதிகளை விளம்பரப்படுத்தி ஹாஜிகளிடமிருருந்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.இவ்வருடம் பல இலட்சம் பணத்தை கொடுத்து ஹஜ் கடமைக்காக சென்ற ஹாஜிகள் பட்ட இன்னல்களை இங்கு இணைக்கப்பட்டுள்ள கடிதமும், காணொளியும் (வீடியோ) சாட்சி பகர்கின்றன.




28.12.2010.
அல்ஹாஜ் வை. எல் எம் நவவி,
பணிப்பாளர்,
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்; திணைக்களம்,
180, டீ.பீ ஜாயா மாவத்தை,
கொழும்பு.10

அஸ்ஸலாமு அலைக்கும்

இவ்வருட ஹஜ் பிரயாணத்தின் போது இடம் பெற்ற குறைபாடுகள் பற்றிய முறைப்பாடு

நான்  ஏற்கனவே இரு முறை ஹஜ்ஜூக்கு சென்ற அனுபவத்தையும் இம்முறை குடும்பம் சகிதம் அங்கு சென்று அனுபவித்த சில கசப்பான நிகழ்வுகளையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

இம்முறை மினாவில் ஹாஜிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியமும், இன்னல்களும், அவலங்களும் இதற்கு முன்னைய ஹஜ் பிரயாணங்களில் எப்போதுமே இடம்பெறவில்லை என்பதை உறுதியுடன் கூறுகின்றேன்.

சென்ற வருடங்களில் ஹஜ் முகவர்களே நேரடியாக “முதவ்வாக்”களை ஏற்பாடு செய்யும் நடைமுறை இருந்து வந்துள்ளது. அதன் போது இலங்கையிலிருந்து செல்லும் ஹாஜிகள் பல் வேறு “முதவ்வாக்க”ளின் கீழ் பொறுப்புக் கொடுக்கப் படுவார்கள்.

ஆனால் இம்முறை இலங்கை ஹஜ் கமிட்டியினரே இந்த ஏற்பாட்டை செய்யப் பொறுப்பேற்றிருந்தனர். வழமைக்கு மாற்றமாக ஹஜ் கமிட்டி இலங்கையிலிருந்து சென்ற அத்தனை ஹாஜிகளையும் ஒரே முதவ்வாவிடம் ஒப்படைத்திருந்தனர்.

இம்முறை ஹாஜிகள் சந்தித்த அத்தனை பிரச்சினைகளுக்கும் ஹஜ் கமிட்டியினர் செய்த இந்தத் தவறேமூல காரணமாய் மாறியது என தங்களை இனம் காட்டிக் கொள்ள விரும்பாத 80 வீதமான ஹஜ் முகவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

26.12.2010 அன்று ஞாயிறு வீரகேசரி பத்திரிகையில் ஹஜ் கமியிட்டடியினர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இதை மறைமாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

இம்முறை ஹஜ் பிரயாண ஏற்பாடு தொடர்பாக குற்றச்சாட்டுகள் பல இருக்கின்றன அவற்றில் சிலவற்றை மாத்திரம் தொட்டுக் காட்ட விரும்புறேன்.

நாம் 41ம் இலக்க முதவ்வா அலுவலகத்தினரால் வழி நடாத்தப் பட்டோம்.

• சுமார் 4000 பேர் தங்கியிருக்க வசதியுள்ள கூடாரங்களில் (வநவெ) 5800 பேரை திணித்தார்கள். இதனால் பலர் பகல் நேரங்களில் மாத்திரம் கூடாரத்துக்குள் இருந்து விட்டு இரவு நேரங்களில் பாதைகளில் தூங்கியதையும் காண நேர்ந்தது.


• இந்த 5800 பேருக்கும் சமைப்பதற்கு ஒரு சமையலறை தான் ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும் தண்ணீர் வசதியுட்பட மலசல கூட வசதிகளும் மிகவும் மோசமான நிலையிலேயே இருந்தது. சில சந்தர்ப்பங்களில் கழிவு நீர் கூட கூடாரங்களுக்குள்ளேயே வழிந்தோடியது. பிரிதொரு சந்தர்ப்பத்தில் அந்த அசுத்தமான (நஜீஸ்) தண்ணீர் சுமார் அரையடி வரை சமையலறைக்குள் தேங்கி நின்றது. மேற் பார்வை செய்ய வந்த சவுதி ஹஜ் கமியிட்டியினர் கூட அங்கு வைக்கப் பட்டிருந்த முறைப்பாட்டுப் புத்தகத்தில் ஏற்பாடுகள் மிகவும் மோசமான நிலையிலுள்ளதாகவே குறிப்பொன்றை எழுதிவிட்டுச்சென்றார்கள்

Thursday, 9 December 2010

விக்கிலீக்ஸ் - சவுதி அரச குடும்பத்தினரின் அந்தரங்க களியாட்டம்

சவுதி அரச குடும்பத்தினரின் அந்தரங்க களியாட்டம் : விக்கிலீக்ஸ் _

 












சவுதியின் மன்னர் குடும்ப இளம் வாரிசுகள் சவூதி நாட்டின் கடுமையான இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு முரணாக அந்தரங்க களியாட்டங்களில் ஈடுபடுவதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெத்தாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஆவணம் ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது சவூதியின் அரச குடும்பத்தினரின் குறிப்பாக இளம் வாரிசுகளின் களியாட்டங்களில் விபசாரிகள் மற்றும் மதுவகைகள், போதைப்பொருள் முக்கிய அம்சமாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்-துனயான் அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் கடந்த வருடம் நடத்திய களியாட்டம் ஒன்றில் சவூதியின் முற்றுமுழுதான இஸ்லாமிய சட்டதிட்டங்கள் மீறப்பட்டதாகவும் மதுபானம் விநியோகப்படுத்தப்பட்டதுடன் விலைமாதர்களும் களியாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொகெயின் மற்றும் அசீஸ் வகை போதைபொருட்களும் இங்கு பரிமாறப்பட்டமை தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர்கள் அச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

இவை அனைத்தும் இரகசியமாகவே இடம்பெற்றதாகவும், சுமார் 150 இற்கும் மேற்பட்ட 20 - 30 வயதுக்கிடைப்பட்ட ஆண் மற்றும் பெண்கள் இதில் கலந்து கொண்டதாகவும் இவர்களைத் தடுப்பதற்கு அந்நாட்டு பொலிஸார் கூட அஞ்சியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இத்தகைய களியாட்டங்கள் சவூதி நாட்டின் இளவரசர்களிடையே தற்போது சகஜம் எனவும் சிலரின் வீடுகளுக்குள்ளேயே மதுபானசாலை, டிஸ்கோ ஆகியவை உள்ளதாகவும் அவ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸினால் வெளியிடப்பட்ட அவ் ஆவணத்தினை இங்கு காணலாம் http://213.251.145.96/cable/2009/11/09JEDDAH443.html

நன்றி   வீரகேசரி இணையம் 12/9/2010 12:42:13 PM

Thursday, 30 July 2009

சஊதி நிதியும் சதியும்




சஊதி நிதி இன்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பாரிய சிந்தனைக் குழப்பங்களை தோற்றுவித்து வருகிறது. 

ஒரே பள்ளிவாசல்; நிர்வாகத்ததில் ஆயிரம் கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் ஒற்றுமையாக வாழ்ந்த சமூகம், இந்த முஸ்லிம் சமூகம். இப்போது இந்த சமூகத்தில் ஒற்றுமை சிதறடிக்கப்பட்டு இருக்கிறது. மஸ்ஜிதுக்கு மஸ்ஜித் குரோதம் வெடித்துக் கொண்டிருக்கிறது. ஆயிரம் கருத்து முரண்பாடுகளுடன் ஒரு பள்ளிவாசலில் அல்லாஹ்வை வணங்கி வந்த இந்த சமூகம், ஒரே உறவுகளாய் ஒரே ஜமாஅத்தாய் வாழ்ந்த இந்த சமூகம், ஊர்களில, நகரங்களில், கிராமங்களில் பிரிந்து நின்று சண்டையிடுகின்றன. குடும்பங்கள் பிளவுபட்டு கொந்தளித்துக் கொண்டிருக் கின்றன. அல்லாஹ்வின் இல்லங்கள் முஸ்லிமின் இரத்தத்தில் உறைந்து அவமானப்படுகிறது. எமக்குள் பிரிவினை உருவாக்க சதி செய்த பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் பிதாமகன்கள் பின்னால் இருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.

தீவிரவாதமும்;, சண்டையும், சச்சரவுகளும், ஒற்றுமையின்மையும் நோய்களாய் இந்த சமூகத்தை எப்படிப் தொற்றின? இதன் பூகோள அரசியல் பின்னணியை ஏன் நாம் புரியாமல் இருக்கின்றோம்? இன்று இஸ்லாத்திற்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயருக்கு  காரணம் என்ன?

அறியாமையின் பக்கமும், அநியாயத்தின் பக்கமும், அட்டகாசத்தின் பக்கமும் வெகு வேகமாக நகர்ந்துக் கொண்டிருக்கும் உலகை நாசத்திலிருந்து காத்து நேர்மையின் நிழலில் நிறுத்த வேண்டிய சமூகம். அல்குர்ஆனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, மனிதநேயத்தின் பால் முழு உலகையும் கொண்டு வரவேண்டும் என ஆவல் கொண்ட சமூகம் ஏன் இந்த இழி நிலைக்குத் தள்ளப்பட்டது?

எரியும் பிர்சினைகள் எவ்வளவோ இருக்க இந்த சமூகத்தை தீவிரவாதத்திலும், தீராத சர்ச்சைகளிலும், விதண்டா வாதங்களிலும் மூழ்கிக் கிடப்பதற்கு பிக்ஹ§ பிரச்சினைகளை வெறுப்புப் பேச்சுகளாய் பேசித் திரிவதே இஸ்லாத்தின் அழைப்புப் பணி  என்று அர்த்தப்படுத்திக் கொடுத்த அந்த அரசியல் சக்தி எது?

வெளிநாட்டுப் பணத்தால் முஸ்லிம் உம்மத்தின் ஒரு பிரிவினரை மூளைச் சலவை செய்தது யார்? இந்தப் பிரிவினர் நாளுக்கு நாள் அவர்களுக்குள்ளேயே பிளவு பட்டு, கருத்து முரண்பட்டு குழுக்களாய் பிரிந்து புதிய புதிய பெயர்களில் இயக்கங்கள் அமைத்து செயற்படுவதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?

இவை எல்லாவற்றிற்கும் இருப்பது ஒரே ஒரு பதில்!
அது தான் சஊதி தஃவா பணம்!
பணத்தை வீசி முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்க சஊதிக்கு ஏன் இப்படி ஒரு தேவை?

உட்பூசல்களைகயும், பிரிவினையையும் அது எதற்காக ஏனைய முஸ்லிம்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்?

சஊதியின் மன்னர் அரசியலுக்கும், அமெரிக்காவின் எண்ணெய் அரசியலுக்கும் உள்ள உறவின் பிறப்பே இந்த முஸ்லிம் உம்மத்தை கூறு போடும் சஊதியின் சதி!

அதை வேறுவிதமாக இப்படியும் சொல்லலாம்.

சஊதி அரேபியா உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் சொந்தமான பூமி! ஏனைய முஸலிம்களுடனான அதன் உறவு ஈமானோடு தொடர்புடையது. அது அல்குர்ஆன் பிறந்த பூமி! அல்லாஹ்வின் தூதர் வளர்ந்த பூமி! அல்லாஹ்வின் தீன் எழுந்த பூமி! அல்லாஹ்வின் தீனை நிலைநாட்டுகின்ற, பாதுகாக்கின்ற தார்மீக பொறுப்பு அந்த நாட்டிற்கு இருக்கிறது. உலகளாவிய முஸ்லிம் உம்மத்தை பாதுகாக்கின்ற பொறுப்பும் அந்த நாட்டிற்கு தான் இருக்கிறது. இஸ்லாமிய கிலாபத்தின் தாத்பரியமும் இதைத்தான் சொல்கிறது. சஊதியை அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவது முழு முஸ்லிம் உம்மத்தையும் ஆதிக்கம் செய்வதற்கு ஒப்பானதாகும்.

இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் முழு உலகையும் விழுங்கிக் கொண்டிருக் கிறது.  அது சூறையாடிய ஆபிரிக்க நாடுகள் பஞ்சத்தில் மரண படுக்கையில் வீழ்ந்து கிடக்கின்றன.  மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்திற்கு கண்ணை வைத்த அமெரிக்கா தான் முஸ்லிம்களால் வெறுக்கப்படுகின்ற ஒரு நாடுஎன்பதையும் நன்கு உணர்ந்திருக்கிறது. அது தனது எண்ணெய் வியாபாரத்தை பாதுகாப்தற்காக சஊதி மன்னராட்சியை பாதுகாக்கிறது. அமெரிக்காவிற்கு சஊதி மன்னராட்சியை பாதுகாப்பதென்பது தனது நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு சமனான விடயமாகும். சஊதியில் மன்னராட்சி சரிவதென்பது அமெரிக்காவின் சரிவுக்கு சமனானதாகும்.

இருபதாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கிலும், இந்திய உபகண்டத்திலும்  தோற்றம் பெற்று வளர்ந்து வரும் கிலாபத் சிந்தனையும், இஸ்லாமிய அரசு பற்றிய கருத்தியலும்,  சஊதியின் வயிற்றில் மட்டுமல்ல அமெரிக்காவின் வயிற்றிலும் புளியைக் கரைத்து வருகிறது.

காலமெல்லாம் எண்ணெய் சூறையாடலை ஒழுங்காகவும், நேர்த்தியாகவும் நடாத்த முடியும் என்று நம்பிக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கும், காலமெல்லாம் மன்னர்களாக மகுடம் சூடி அறியாமையின், ஜாஹிலிய்யத்தின் ஜாம்பவான ;களாக ஜொலிக்க முடியும் என்று கனவு கண்டுக்கொண்டிருந்த சஊதிக்கும் இது இடையூறாகவே இருந்தது.

மத்திய கிழக்கில் எழுந்து வந்த இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கமும், பலஸ்தீன் போராட்டமும், இந்திய உபகண்டத்தில் உதயமான ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கமும் கிலாபத் சிந்தனையை கூர்மைப்படுத்தின. எழுபதுகளின் இறுதிப் பகுதியில் ஈரானில் ஏற்பட்ட மன்னராட்சியின் வீழ்ச்சியும், ஷீஆ அடிப்படைவாத ; எழுச்சியும் சஊதியை குலை நடுங்க வைத்தன.

இந்த கிலாபத் கருத்தியல்வாதிகளை, இயக்கங்களை தனது கைக்குள் வைத்திருக்கும் நோக்கில் சஊதி அரசாங்கம் ஆரம்பம் முதல் இந்த இயக்களுக்கு நிதியதவியை வழங்கி போஷித்து வளர்த்தது. தனது பெற்றோல் பணத்தின் பொறிக்குள் தான் சார்ந்த அமெரிக்க அரசியல் நலன்சார்ந்த எஜன்டாவிற்குள் இஸ்லாமிய அரசியல் சித்தாந்தவாதிகளை சிக்கவும் வைத்தது.

அமெரிக்காவின் அனுசரணையுடன் இலங்கையில் கொண்டு வந்து கொட்டப்பட்ட பெற்றோல் டொலர்களால்  இஸ்லாமிய அரசியல் சிந்தனையை வாயிலும் அதற்கு நேரெதிரான மன்னராட்சியை இதயத்திலும் வைத்துக்கொண்ட இஸ்லாமிய அழைப்பாளர்கள் என தம்மைத் தாமே அழைத்துக் கொண்ட கூலிப்பட்டாளங்களின் கூட்டங்கள்  அந்த நிதிச் சதியில் பிறப்பெடுத்தன.

கிலாபா மற்றும் பித்அத் எதிர்ப்பு கருத்தியல் காவிகளான  தலைவர்களுக்கு 'மப்ஊஸ்' என்ற பட்டம் (சஊதி பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம்) வழங்கி ஆயிரக்கணக்கில் மாதாந்த கொடுப்பனவும் வழங்கியது சஊதி அரசு. 

சஊதியில் மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்களுக்கு சஊதிக்கும், அமெரிக்காவுக்கும் பாதகம் இல்லாமல் தஃவாவை வடிவமைக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது. 70 களின் இறுதிப் பகுதியில் அமெரிக்காவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையில் இருந்த பனிப்போரின் முக்கிய பாத்திரங்களாக இந்த 'பெற்றோல் டொலர் புண்ணியவான்கள்'  பாவிக்கப்பட்டார்கள்.

சஊதியின் இஸ்லாத்திற்கு முரணான செயற்பாடு;களையும் தமது சம்பளப் பணத்தையும் பாதுகாத்துக் கொண்டு சேவையாற்றும் சிறந்த  இஸ்லாமிய அழைப்பாளர்களாக (தாஈகளாக)  இவர்கள் உருவாகினார்கள்.

தொன்னூறுகளின் ஆரம்பத்தில்  கிலாபத் இயக்கங்களுக்கு போட்டியாக சஊதி அரசு தனக்கே உரிய, தனது கட்டுப்பாட்டில் இயங்கும் பித்அத்களுக்கு எதிராக போராடும் 'வஹ்ஹாபிஸ' கருத்தியலை களம் இறக்கியது. அந்தக் காலப்பிரிவில் வளைகுடாவில் ஏற்பட்ட ஈராக், குவைத் பிரச்சினை அமெரிக்காவிற்கு மத்திய கிழக்கில் கால் பதிக்க சிறந்த காரணமாக மாறியது.

90களில் ஈராக் இராணுவம் குவைத் நாட்டை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து,அமெரிக்க படையின் குவைத் மீட்பிற்கு பிறகு வஹ்ஹாபிஸத்தையும், கிலாபத் சிந்தனையையும் இரு கூறுகளாக மாற்றி சஊதி, அமெரிக்க உளவு நிறுவனங்களின் மேற்பார்வையில் இந்த தஃவா இயக்கங்களுக்கு நிதி வழங்கப்பட்டு வந்தது. 

பித்அத் எதிர்ப்பு வஹ்ஹாபிஸ இயக்கங்களுக்கு சஊதியும், கிலாபத் கருத்தியல் கொண்ட  இயக்கங்களுக்கு குவைத்தும் பகிரங்கமாகவே உதவியளித்து வருகின்றன. சமூகத்தில் தீவிரவாத சிந்தனைகளை வளர்த்து, கருத்து முரண்பாடுகளுக்குள் மூழ்கி கிடக்கும் ஒரு சமூகம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படை நோக்கத்திலிருந்து வேறுபக்கம் திசை திருப்பி சில்லறை பிரச்சினைகளுக்குள்ளும், பிரிவினைகளுக்குள்ளும் சமூகத்தை சிக்க வைப்பதில் சஊதி வெற்றி யும் கண்டிருக்கிறது.

உண்மையில் சஊதி அரசாங்கம் இஸ்லாத்தின் மீது பற்றுக்கொண்ட ஒரு நாடாக தன்னை அடையாளப்படுத்த வேண்டும் என்ற அவசியம் அதற்கு இருக்குமேயானால், தன்னுள் குடிகொண்டுள்ள ஜாஹிலிய்யத்தான அசிங்கங்களை அகற்றி ஓர் உண்மை முஸ்லிம் நாடாக அதற்கு முன்னுக்கு வர முடியும். உலகளாவிய இஸ்லாத்தின் தலைமைத்துவத்தை ஏற்று முழு உலகிற்கும் வழிகாட்டவும்,  முன்னுதாரணமாய்  திகழவும் அதற்கு  முடியும்.

ஆனால் சஊதி தன் தலையில் சூடிக்கொண்டிருப்பதோ மௌட்டீகத்தின் மறுபிறப்பான மன்னராட்சி அரசு ! 

ஷரீஆ சட்டம் என்ற போர்வையில் இருப்பதோ வலிமையாளன், எளிமைமையானவனை ஏய்த்துப் பிழைக்கும் சமூக அநீதி! அந்த நாட்டிற்கு சென்று வந்தவர்கள் சொல்வதெல்லாம் இஸ்லாத்திற்கும் சஊதிக்குமான இடைவெளி  மிக  மிக  அதிகம்  என்பதே.

இஸ்லாத்தை விட்டும் தூரமாக பயணித்துக் கொண்டிருக்கும் சஊதி போன்ற ஒரு நாடு எமது நாட்டில் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வுகளுக்கும், துல் ஹஜ் மாதம் உழ்ஹிய்யா என்ற மாடுகளை பலியிட்டு பகிரும் செயற்பாட்டிற்கும் பல கோடிக்கணக்கான  ரூபாய்களை  தனது ஏஜன்ட்கள் மூலம் வழங்கி வருவதை நாம் எல்லோரும் அறிவோம். இந்த நடவடிக்ககைகள்; இந்த நாட்டில் சிங்கள பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் இன ரீதியிலான விரிசல்களை ஏற்படுத்த திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் ஒன்று என்பதை அனேகம் பேர் அறியாமல் இருக்கின்றனர்.

சஊதி நாட்டில் பணிப்பெண்களாக தொழில் புரிபவர்களுக்கு பல இன்னல்கள், கொடுமைகள் நிகழ்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர்களுக்கு ஒழுங்கான ஊதியம் வழங்கப்படாமல் அடிமைகள் போல நடாத்தப்படுவதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஏழைகளுக்கு ஒழுங்கான ஊதியம் கொடுக்காதவர்கள்;,  அந்நிய பெண்களை பணிப்பெண்ணாய் தன் வீட்டிற்குள் அனுமதித்து அவர்களை கொடுமை செய்பவர்கள்;, அவர்களை மானபங்கப் படுத்துபவர்கள், உண்மை முஸ்லிமாக இருப்பார்களா? அவர்களிடமிருந்து உண்மையான இஸ்லாத்திற்கான உதவியைத்தான் எதிர்பார்க்க  முடியுமா? என்ற கேள்வியின் நியாயத்தன்மையை நிறைய பேர் புரியாமல் இருக்கின்றார்கள். இஸ்லாமிய பிரசாரம் என்ற போர்வையில் இலங்கை போன்ற நாடுகளில் பணத்தைக் கொண்டு வந்து கொட்டாமல், தனது நாட்டில் பணிப்பெண்களாக தொழில் புரியும் ஏழை பெண்களுக்கு கருணை காட்டி இஸ்லாம் போதிக்கும் மனித நேயத்தை உலகிற்கு பறைசாற்ற முடியும்.

ஒரு வாதத்திற்கு எல்லா அரபுகளும் அப்படியல்ல, அந்நாட்டிலுள்ள  நல்லவர்கள் தான் எமக்கு,  எமது தஃவா இஸ்லாமிய பிரசார  பணிகளுக்கு பணம் தருகிறார்கள் என்று வைத்துக் கொண்டால், தனது நாட்டில் நடக்கும் இந்த கொடுமைகளை ஏன் இந்த நல்லவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? சவுதி நாட்டில் இடம்பெறும் அநீதிகளை தடுத்து நிறுத்தி இஸ்லாத்தின் பெயரை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்காமல்  இலங்கை நாட்டிற்கு பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு நிதியும், ஹஜ் மாதத்தில்  மாடுகளை அறுத்து பலியிடும் உழ்ஹிய்யா கடமையை ஊக்குவிக்க பணமும், நோன்பு துறக்கும் இப்தாருக்கு ஈத்தம் பழங்களை வழங்குவதால் இவர்களின் கடைமை நீங்கு விடுமா?

வாழ்க்கையின் கஷ்டங்களிலிருந்து மீண்டு வரும் எண்ணத்தில் தனது நாட்டிற்கு வரும் தொழிலாளர்களுக்கு சஊதி கொடுக்கும் சித்திர வதையை வாயால் சொல்லித் தீர்க்கத்தான் முடியுமா? சொந்தங்களை பிரிந்து அபலைகளாய் அந்த நாட்டில் தஞ்சம் புகும் பணிப்பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை களுக்கு அந்த நாடின் சட்டங்களால் கூட பாதுகாப்பு வழங்க முடிவதில்லையே!  சுருக்கமாக சொன்னால் அன்று இஸ்லாம் ஒழித்துக்கட்டிய அடிமைத்துவத்தை இன்றைய அரேபிய குபேரர்கள் அச்சொட்டாக உயிர்ப்பித்து இருக்கிறார்கள். அன்றைய அடிமைகள் பட்ட துன்பத்திற்கும் இன்றைய தொழிலாளர்கள் படும்   துன்புறுத்தல்களுக்கும் எவ்வித வித்தியாசமுமில்லை. 

அன்றைய ஜாஹிலிய்யா  அறியாமைக் காலத்தில் வாழ்க்கை முழுவதும் அடிமையாக இருந்த நிலை மாறி இன்றைய சஊதியின் நவீன ஜாஹிலிய்யத்தில் இரண்டு அல்லது அதற்கு கூடிய வருடங்கள அடிமையாக இருக்க வேண்டிய நிலை தொழிலாளர்களுக்கு எற்பட்டிருக்கிறது. இந்த இரண்டு வருட அடிமை வாழ்வில் அவர்களுக்கு ஊதியமாய் வழங்கப்படுவதோ மிகவும் சொற்ப பணம். சொற்ப பணத்திற்கு 24 மணிநேரமும் உழைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. இத்தகைய இஸ்லாம் விரும்பாத அத்தனை செயல்களுக்கும் முன்னுதாரணமாக இந்த முடியாட்சி நாடு விளங்குகிறது.

மன்னராட்சி மூலம் இஸ்லாமிய ஆட்சி தொடர்பான இஸ்லாத்தின் அடிப்படையை தகர்த்துக் கொண்டிருக்கும் சஊதி நாடு, அது செய்யும் குற்றங்களை மூடி மறைத்து உலக முஸ்லிம்களை வேறு பக்கம் திசை திருப்பவே தனது ஏஜன்டுகள் மூலம் பிக்ஹ§ என்ற இஸ்லாமிய வழிபாடுகள் சார்ந்த கருத்து முரண்பாடுகளை பிரச்சினைகளை பிரச்சாரமாக்கியிருக்கிறது. 

அல்குர்ஆனின் பக்கம் மக்களை அழைக்கின்ற மனித நேயத்திற்கு அழைப்பு விடும்  மகத்தான பணியை அது மறைத்து வைத்திருக்கிறது. பெயரளவில் அது குர்ஆனை சட்டநூலாக வைத்திருக்கிறது.

ரசூலுல்லாஹ தொழுததைப் போன்று தொழ உலகிற்கு பிரசாரம் புரியும் சஊதி அரசு, றசூலுல்லாஹ் ஆட்சி செய்தது போல் செய்வதற்கு தயக்கம் காட்டுகிறது. ரசூலுல்லாஹ் மிகவும் வெறுத்த ஆடம்பரத்தை அது அணைத்து பிடித்துள்ளது. தொழுகையும் 'பித்அத்' என்ற  எதிர்ப்பு நிலை மட்டுமே இதன் தஃவாவின் அடிப்படையாக மாறியிருக்கிறது. 

ஒரு தெருவில் இரண்டு மூன்று பள்ளிவாசல்களை கட்டி சமூகத்தை கூறுபோடும் இதன் போக்கில் ஸக்காத் பெயரளவில் உச்சரிக்கப்படும் ஒன்றாகவெ இருக்கிறது. பட்டினியால் வாடும் நாடுகள் பல இருக்க இலங்கைக்கு இறைச்சிக்காக கோடிக்கணக்கான பணத்தை கொட்டிக் கொண்டிருக்கிறது.

அரபுகளின் ஸக்காத் பணத்தை அறவிட்டு இலங்கை போன்றதொரு நாட்டிற்கு வழங்கினால் எத்தனை ஏழைகளை வறுமையின் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுக்கலாம்? றசூலுல்லாஹ் தொழுதது போல் தொழ மட்டும் தானா வேண்டும்? றசூலுல்லாஹ் செய்தது போல் ஸக்காத் கடமையை செய்யக் கூடாதா? பள்ளிவாசல்களை மட்டும் தான் கட்டவேண்டுமா? பாடசாலைகளை கட்டி இந்த முஸ்லிம் சமூகத்தை முன்னேற விடக் கூடாதா?

தஃவா என்ற பதம் பிக்ஹ§ பிரச்சினைகளை முன் வைத்து வாதாடும் வாய்ச்சண்டை களமாக கொச்சைப்பட்டு நிற்கிறது. உண்மையான இஸ்லாமிய தஃவாவின் மனித நேய ஒளியில் உலகம் ஒளிர வேண்டிய காலத்தில் சர்ச்சைகளை இலங்கைக்கு ஏற்றுமதி  செய்து  சஊதி  இன்பம்  காணுவதின் பின்னணியில் அமெரிக்க நலன் காக்கும் ஓர் அரசியல் இருக்கிறது.

சஊதி பணத்தில் சுவாசித்து உயிர் வாழும் அத்தனை இயக்கங்களும் இன்று ஒன்று ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. தன்னை தௌஹீத் என்று பிரகடனப்படுத்திக் கொள்பவர்கள், மாற்றுக் கருத்துள்ள மௌலானா மௌதூதியை வழிகேடர் என்று வரிந்து கட்டிக்கொண்டு பிரசாரம் செய்கின்றனர்.

கிலாபத் சிந்தனையை கூலிக்காக பேசுகின்ற ஏனைய இயக்கங்கள் தௌஹீத்வாதிகளை திட்டித் தீர்க்கின்றனர்.  

ஒரே நாட்டின்  நிதி மூலத்திலிருந்து உதவி பெற்று பல கூறுகளாய், பல ஜமாத்களாய், பல பிரிவுகளாய் பிரிந்து நின்று இவர்கள் ஒற்றுமையின் கயிற்றைப் பற்றிப்பிடியுங்கள் என்று பிரசாரம் புரிகின்றனர்.  இவர்களிடம் இல்லாத ஒற்றுமை இவர்களின் பிரசங்கஙகளை கேட்பதால் மக்களுக்கு எப்படி வரும்?

இறுதியாக, இன்னுமொன்று சொல்ல இருக்கிறது. அல்லாஹ்வின் தூதர்  நபி (ஸல்) அவர்களும் , அவரின் உத்தம தோழர்களும் தன் சொந்த உழைப்பிலேயே இஸ்லாமிய பணி புரிந்தார்கள். அவர்களின் இஸ்லாமிய பிரசாரத்தின் பின்னணியில் எதிரிகளின் அரசியல் நலன் காக்கும் எந்த எஜன்டாக்களும் இருக்கவில்லை.  

முனாபிக்குகளின் 'முதுகு சொறியும்' அரசியலை அவர்கள் ஒரு போதும் செய்யவில்லலை.  அபூஜஹ்ல்களிடம் ஊதியம் அறவிட்டு அவர்கள் ஒரு போதும் தஃவா இஸ்லாமிய அழைப்புப் பணி  செய்யவில்லை.  அவர்கள்  தன் சொந்த உழைப்பிலே அவர்கள் இஸ்லாத்தை உயிர்ப்பித்தார்கள். மனித நேயத்தை வளர்த்தார்கள்.  

ஆனால் இன்றைய இஸ்லாமிய அழைப்புப் பணியாளர்கள் ரசூலுல்லாஹ் செய்யாத அழைப்புப் பணிக்காக ஊதியம் பெறும் அதி நவீன பித்அத்தை செய்து வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ரங்க திசாநாயக்கவை கண்டு நடுங்கும் எதிர்க்கட்சிகள்

  "பாண் ஒன்றைத் திருடினாலும், 'மிக்' விமானத்திலிருந்து திருடினாலும் இரண்டும் ஒரே திருட்டுதான்." இது வெறும் வார்த்தைகளாக எ...