Tuesday 8 February 2011

எகிப்தின் ஒமர் சுலைமான் ஒரு மொசாட் ஏஜன்ட் ! விக்கிலீக் அம்பலம்


எகிப்தின் தற்போதைய பதில் ஜனாதிபதியாக முபாரக்கினால் நியமிக்கப்பட்டுள்ள ஒமர் சுலைமான் 2008ம் ஆண்டு அப்போதைய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த எஹுத் பராக் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்றும் முபாரக்கிற்கு அடுத்தபடியாக எகிப்தின் தலைமைத்துவத்தை ஏற்க இவர் தகுதியானவர் என்று இஸ்ரேல் இவரை சிபார்சு செய்திருப்பதாகவும் விக்கிலீக் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிப்பதாக பிரித்தானிய டெய்லி டெலிகிராப் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.


எகிப்தின் உளவு அமைப்பின் தலைவராக செயற்பட்ட ஒமர் சுலைமான் எதிர்க்கட்சியனரை வஞ்சம் தீர்ப்பதில் முனைப்புடன் செயற்பட்டவராவார். ஆட்கடத்தல், கொலை, சித்திரவதை போன்ற செயல்களை எதிர்க்கட்சினர் மீது தைரியமாக கட்டவிழ்த்து விட்ட இவரை அமெரிக்கா, இஸ்ரேலின் ஆதரவோடு தான் முபாரக் பதில் ஜனாதிபதியாக நியமித்திருக்கின்றார்.

மேற்குலகினதும், இஸ்ரேலினதும் கைக்கூலியான ஒமர் சுலைமானின் தலைமையில் ஜனநாயகத்தை எகிப்தில் நிலைநாட்டுவது என்பது கேள்விக்குரிய விடயமாகும். 

அமெரிக்கா ஒமர் சுலைமானை ஆசிர்வதிப்பதோடு எதிர்க்கட்சியான இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்போடு பேச்சுவார்த்தை நடாத்தும் படியும் வேண்டுகோள் விட்டிருக்கிறது.

அன்று அமெரிக்க ஏகாதிபத்தியம், ரஷ்ய சார்பு நாஸருக்கு எதிராக அரபு நாடுகளின் உதவியோடு இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தை எழ வைத்து அவர்கள்அழிவதற்கு துணை போனது. அன்று செய்த அந்தச் சூழ்ச்சியை மீண்டுமொரு முறை செய்து அந்த இயக்கத்தை பூண்டோடுஅழிக்க முயற்சி செய்கிறதா என்ற சந்தேகம் இப்போது வலுப்பெற்று வருகிறது.

ஹுஸ்னி முபாரக்கிற்கு சஊதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ்வும்,  இஸ்ரேலும் மற்றும் ஒரு சில மேற்குலக நாடுகளும் தமது பூரண ஆதரைவை தெரிவித்திருக்கின்றன.

முபாரக் தனது பதில் ஜனாதிபதியாக இஸ்ரேல் ஆதரவாளரான ஒமர் சுலைமானை தெரிவு செய்திருப்பதுவும், அவரின் தலைமையில் எகிப்தில் ஒரு ஆட்சி மாற்றம் உருவாகுவதையே இந்த நாடுகள் விரும்புகின்றன.

இஸ்ரேல், சவுதி அரேபியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் இந்த நிகழ்ச்சி நிரலால் மத்திய கிழக்கின் தலை விதி எப்படி அமையப்போகிறதோ என்ற அச்சம் எல்லோருக்கும் உருவாகியிருக்கிறது.


No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...