Saturday 5 February 2011

எகிப்து - இஸ்ரேல் இயற்கை வாயுக் குழாய் தகர்க்கப்பட்டது



எகிப்தில் அல் எரிசா பகுதியில் உள்ள எகிப்தில் இருந்து இஸ்ரேலுக்கான இயற்கை வாயு குழாய், இனம் தெரியாதோரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் குழாயில் அங்காங்கே வெடிப்புக்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளதுமாக எகிப்திய அரச தொலைக்காட்சி தெரிவத்துள்ளது. எகிப்திய இராணுவம் குழாயின் பிரதான இடங்களை அடைத்து தீப்பற்றி எரிதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. தீச்சுவாலை வானில் 20 கிலோமீட்டர் உயரத்திற்கு எழுந்துள்ளதாக பிரதேசவாசிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.

1979 ம் ஆண்டு ஒப்பந்தத்தின் பின்னர் எகிப்து, இஸ்ரேலின் 40 சதவீத இயற்கை வாயுத் தேவையை நிறைவு செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-PressTV

Friday 4 February 2011

ஹுஸ்னி முபாரக் - இது வெளியேறும் வெள்ளிக் கிழமை




(பொலிஸ் படையைச் சேர்ந்த முபாரக்கின் கையாட்கள் பொதுமக்களை தாக்குகின்றனர்)

எகிப்தின் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டிருக்கும் ஹுஸ்னி முபாரக்கை வெளியேற்றும் வெள்ளிக்கிழமை உதயமாகி விட்டது.

இன்று ஜும்ஆ தொழுகைக்காக கூடும் பல லட்சம் மக்கள் முபாரக்கின் ஜனாதிபதி மாளிகையை நோக்கி படையெடுக்கவிருக்கின்றனர்.

இதே நேரம் இராணுவம் பொதுமக்கள் மீது எவ்வித தாக்குதல்களையும் நடாத்தாது என்று இராணுவம் அறிவித்திருக்கிறது.  எகிப்தில் ஒரு அரசியல் மாற்றம் உருவாவதை இராணுவம் விரும்புவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பத்து நாட்களை எட்டியிருக்கும் எகிப்தின் போராட்டம் கடந்த புதன் கிழமை வேறு வடிவில் திசை திரும்பியது.

பொலிஸ் படையைச் சேர்ந்த முபாரக்கின் கையாட்கள் சாதாரண மக்கள் போல் உடையணிந்து பேரணி இடம் பெறும் தஹரீர் சதுக்கத்திற்குள் நுழைந்து பொது மக்களை தாறுமாறாக தாக்கினர். இதில் பத்து பொதுமக்கள் பலியாகி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இத்தாக்குதலை நடாத்தியதன் மூலம் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கும் முபாரக் அரசு மீண்டுமொரு முறை உலகளாவிய ரீதியில் விமர்சனத்திற்கு உள்ளானது.


எகிப்தில் சர்வதேச மன்னிப்புச் சபை உறுப்பினர்கள் கைது!


சர்வதேச மன்னிப்புச் சபையின்( Amnesty International )முக்கியஸ்தர்கள் மூவரை எகிப்தின் இராணுவ பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.

அடக்கு முறைக்கு எதிரான மக்களின் போராட்டம் எகிப்தில் வலுப்பெற்று வரும் இத்தருணத்தில் மனித உரிமை ஆர்வலர்களின் செயற்பாட்டிற்கு தடைவிதிக்காமல் நிபந்தனையுமின்றி அவர்களை விடுவிக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை வீழ்ந்துக் கொண்டிருக்கும் முபாரக் அரசிடம்வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் முக்கிய உறுப்பினரோடு ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் (Human Rights Watch)அமைப்பைபின் பிரதிநிதியான ஸைபுல் இஸ்லாம் காலித் அலீயும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், தற்போது அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற தகவல் இதுவரை தமக்கு தெரியாமல் இருப்பதாகவும் மேற்படி சபை அறிவித்திருக்கிறது.

 சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் சலில் ஷெட்டி (Salil Shetty )தமது உறுப்பினர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இடையூறாகசெயற்படவேண்டாமென்றும் எகிப்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Thursday 3 February 2011

எரிபொருள் தடை ! மனமுடைந்திருக்கிறது இஸ்ரேல்!


அமெரிக்க, இஸ்ரேலின் நேச நாடுகளான அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும்  எதிர்ப்புப் போராட்டங்களினால் தனது நாட்டுக்கு தேவையான எரி சக்தியைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் எதிர்காலத்தில் குறையலாம் என்று இஸ்ரேல் அச்சம் தெரிவித்திருக்கிறது.

”மத்திய கிழக்கின் ஸ்திரமற்ற அரசியல் நிலை எங்களின் எதிர்கால எரிசக்தி பிரச்சினை தொடர்பாக மீண்டும் ஒருமுறை எங்களை சிந்திக்க வைத்திருக்கிறது. எரி சக்தி பயன்பாட்டில் மற்றவர்களை தங்கியிராத ஒரு நிலைக்கு நாங்கள் நகர வேண்டும்” இப்படி கூறியிருக்கிறார்  இஸ்ரேலிய தேசிய உட்கட்டமைப்பு அமைச்சரான  உஸிலந்தோ. ஏஎப்பி செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது.

இஸ்ரேல் தனது எரிபொருள் தேவையின் 40 வீதத்தை எகிப்திலிருந்து பெற்று வருகிறது.  எகிப்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தினால் தடுமாறிப் போயிருக்கும் இஸ்ரேல் தனது நாட்டின் எதிர்காலம் மற்றும் இருப்பு தொடர்பாக கடும் பீதியில் திணறிக்கொண்டிருக்கிறது.

கடந்த டிஸம்பர் மாதம் நான்கு இஸ்ரேலிய நிறுவனங்கள் எகிப்தோடு பல பில்லியன் டொலர்களுக்கான எரிவாயு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டது. எதிர்வரும் இருபது ஆண்டுகளுக்கான எரிபொருள் ஏற்றுமதிக்கான இந்த ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேலுக்கு இப்போது அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

மத்தியகிழக்கில் இஸ்ரேலுக்கு மிகவும் துணையான நேசமான  நாடாக எகிப்தை அமெரிக்கா  உருவாக்கியிருக்கிறது.  இஸ்ரேலுக்கு அடுத்த படியாக அமெரிக்காவின் நிதி உதவி பெறும் நாடாக எகிப்து திகழ்கிறது.

Wednesday 2 February 2011

எகிப்து எனது நாடு! ஹுஸ்னி முபாரக் சூளுரை!


                                             சவூதியின் நண்பனாக முபாரக்

எகிப்து எனது நாடு ! இது எனது பிறந்த பூமி! இது நான் போராடி பாதுகாத்த நாடு இதை விட்டு விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன். நான் மரணிப்பதுவும் இந்த பூமியில்தான் என்று ஹுஸ்னி முபாரக் சூளுரைத்திருப்பதாக பிரஸ் ரிவி இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது
.

                                          
                                           யெஹுதியின் நண்பனாக முபாரக்

எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை தான் பதவியிலிருக்கப் போவதாகவும்  முபாரக் உறுதியளித்திருக்கின்றார்.

முபாரக்கின் உரைக்கு பதிலளித்த போராட்ட அணியினர், முபாரக் எதிர்வரும் 4ம் திகதி வெள்ளிக்கிழமையை முபாரக்கின் வெளியெறும் நாளாக  “Friday of departure”  அறிவித்திருப்பதுடன், அன்றைய தினம் முபாரக்கின் மாளிகையில் தாம் அணி திரளவிருப்பதாகவும் அறிவித்திருக்கின்றனர்.

எகிப்து எழுகிறது - இஸ்ரேல் அழுகிறது!




எகிப்தில் தொடராக எட்டாவது நாளாக இடம் பெற்று பேரணியால் தலைநகர் கெய்ரோ ஸ்தம்பித்தது. எனினும்அதிபர் ஹுஸ்னி முபாரக் பதவி விலக மறுத்து வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. எகிப்து மக்களின்போராட்டம் நேற்றும் 8வது நாளாக நீடித்தது.  சுமார் 10 லட்சம் பேர் தலைநகர் கெய்ரோவை நோக்கி படை எடுத்திருந்தனர். ஹுஸ்னி முபாரக்கை எகிப்தை விட்டு வெளியேறும் படி அவர்கள் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்த இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தும் , இராணுவம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தத் முபாரக் தயார் என அறிவித்தும், அதனை ஏற்றுக்கொள்ள யாரும் முனவரவில்லை.

இதேவேளை தனது சகாவான முபாரக்குக்கு ஆதரவு திரட்டி இஸ்ரேல் ஐப்ரோபிய நாடுகளில் தனது தூதரகங்கள் ஊடாக பிரசார நடவடிக்கைகளை தீவிரமாக்கும் படி அந்தந்த நாட்டிலுள்ள இஸ்ரேலர்களுக்கு பணிப்புரை விடுத்திருக்கிறது.

எகிப்தில் முபாரக்கின் வீழ்ச்சி பலஸ்தீனின் ஹமாஸை வலுவான சக்தியாக மாற்றும் என்று இஸ்ரேல் அச்சம் தெரிவித்திருக்கிறது.  அதேவேளை தான் வளர்த்த முபாரக்கை கைவிட்டது போல் நடிக்கும் அமெரிக்க சந்தேகத்திடமான ஒரு பாத்திரத்தை வகிக்க ஆரம்பித்திருக்கிறது. எகிப்து தொடர்பாக அமெரிக்காவின் அண்மைய நிலைப்பாடு மாறுபட்டிருக்கிறது. 

எகிப்தின் முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் தொடர்ச்சியாக எட்டாவது நாளையும் கடந்து வீரியத்துடன் நடந்து வரும் நிலையில், 

"எகிப்து மக்கள் அமெரிக்கா முபாரக்கிற்கு ஆதரவளிப்பதாக தவறாக நினைத்துள்ளனர். அமெரிக்கா ஹுஸ்னி முபாரக்கிற்கு ஆதரவளிக்கவில்லை" என அமெரிக்க செனட்டர் ஜோன் கெர்ரி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திடீரென நியாயத்தின் பக்கம், மக்கள் பக்கம் சாய்ந்தது போன்ற அதன் நிலைப்பாட்டில் விபரீதம் ஒன்று மறைந்திருப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டையும் உணர முடிகின்றது.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை  இஸ்ரேல் கடுமையாக சாடியுமுள்ளது. "முபாரக்கின் அரசு கவிழ்ந்தால் எகிப்தின் முஸ்லிம் சுசகோதரத்துவக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமை மோசமாகும். உலக நாடுகளுக்கும் பிரச்னை அதிகரிக்கும்" என இஸ்ரேல் அமைச்சர் அயூப்கரா அச்சம் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலின் இந்த கலக்கத்தைப் பார்க்கும் போது மத்தியக்கிழக்கில் அதன் சண்டித்தனத்திற்கு துணை போனவர்களாக இந்த அரபுத் தலைவர்கள்   திகழ்ந்திருக்கின்றார்கள என்ற உண்மையை புரியக் கூடியதாக இருக்கிறது.


இதேவேளை Gulf Civil Society Forum (GCSF) என்ற அமைப்பு ஹுஸ்னி முபாரக்கிற்கு உதவி புரியும் அரபு தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளது.  தொடர்ந்தும் இத்தகைய அடக்கு முறையாளர்களுக்கு உதவி செய்வதை உடனடியாக நிறுத்தும் படி வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

அரபு உலகிற்கு ஜோர்ஜ் கெல்லோவேயின் அறைகூவல்!




ஹுஸ்னி முபாரக் ஒரு கிரிமினல் குற்றவாளி என்றும் அவரை தூக்கியெறிய திரண்டிருக்கும் எகிப்திய மக்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தும், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் கெல்லோவே George Gallowayஅவர்கள் உணர்ச்சிபூர்வமான உரையொன்றை ஆற்றியிருக்கிறார்.

இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளின் உறுதுணையோடு பலஸ்தீன் மக்கள் மீது தொடுக்கப்படுகின்ற கொலைகளுக்கும், பொருளாதாரத் தடைகளுக்கும் பக்கபலமாக நின்று செயல்பட்டவர்தான்இந்த ஹுஸ்னி முபாரக்.

இவரை ஒரு கிரிமினல் குற்றவாளி என்று வர்ணித்த ஜோர்ஜ் கெல்லோவே அவரை துடைத்தெறிவதற்கு எகிப்திய மக்களோடு சேர்ந்து அதன் இராணுவமும் முன்வரவேண்டும் என அவர்வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இஸ்ரேல்- பலஸ்தீன் விவகாரத்தில்இஸ்ரேலுக்கு பக்கபலமாகசெயற்பட்டு வருபவர்தான் இந்த முபாரக்.

காஸா, எகிப்து எல்லையான ரபா எல்லைக் கதவை மூடி இஸ்ரேல் காஸா மீது விதித்துள்ள பொருளாதார தடைக்கு ஆதரவாக தனது பூரண ஆதரவை வழங்கியவர்தான் ஹுஸ்னி முபாரக். இதன்மூலம் பலஸ்தீன் மக்களை மருத்துவம், உணவு மற்றும்அடிப்படை வசதிகளை எகிப்திலிருந்து பெற்றுக்கொள்ளாமல் காஸா மக்களை பட்டினிச் சாவிற்கு தள்ளியவர்.

பலஸ்தீன் விவகாரத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு கொண்டு செயற்பட்டு வரும் ஜோர்ஜ் கெல்லோவே அரபு நாடுகளின் அமெரிக்க, இஸ்ரேல் நலன் சார்ந்த அரசியலை மிகவும் வன்மையாக கண்டிப்பவர். விமர்சிப்பவர். மனிதநேயம் மிக்கவர். பணம், பட்டம், பதவிகளுக்கு விலைபோகாதவர்.

இங்கு ஜோர்ஜ் கெல்லோவே பற்றி எழுத, அவரைப் பற்றி அறியத் தர, அவரின் உரையை பதிவிலிட இன்னொரு முக்கிய காரணம் எனக்கு இருக்கிறது.

அது என்னவென்றால்,

சமகாலத்தில் வர்த்தகமயமான எமது தஃவா தளத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும், எமது புத்தி (?) ஜீவிகள் பலருக்கு ஜோர்ஜ் கெல்லோவே இடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டுவதற்கு சிறந்த தருணமாக இது எனக்குத் தோன்றியது.

இன்று அரபுகளின் பணத்திற்காக அரபு நாடுகளின் இஸ்லாத்திற்கு முரணான அரசியலை செயற்பாட்டைப் பாதுகாக்கின்ற “படித்தவர்கள்” நிறைய பேர் உருவாகியிருக்கின்றார்கள்.

அரபுகளின் அராஜகங்களை முழுமனதோடு ஆதரிக்கின்ற, அவர்களை விமர்சிப்பதை எப்போதும் விரும்பாத புகழ்பூத்த புத்திஜீவிகள் (?)  பலர் பிறந்துக்கொண்டிருக்கின்றார்கள்.

அரபுகளிடம் கையேந்துவதை தொழிலாகக் கொண்ட இவர்கள் , ஏகாதிபத்திய நலன் சார்ந்தஅரபுகளின் தூதுவர்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கைக்கூலிகளாக கடமையாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு அரபுகள் மீதான விமர்சனம் அடிக்கடி அஜீரணமாகின்றது.

இந்த அஜீரணத்தை இல்லாமலாக்க இவர்களிடம் இருக்கும் அரு மருந்து, மற்றவரின் கருத்துச் சுதந்திரத்திற்கு தடைகள் போடுவது.  அரபுகள் மீதான விமர்சனம் கையேந்தும் போது குறுக்காக வந்து தடையேற்படுத்திவிடும் என்று தயங்கிப்போய் நிற்கிறார்கள்.

வயிற்றுப் பிழைப்புக்காக வரிந்துக் கட்டிக்கொண்டு இஸ்லாம் பேசும் இவர்கள், இன்று ஆரோக்கியமான திறந்த “கருத்துத் தளத்தை” தமது கழிப்பறைகளாக்க மாற்றும் வெட்கம் கெட்ட தந்திரத்தையும் கையாண்டு வருகின்றனர்.

அரபுகளின் ஏஜன்டுகளாக இருக்கும் இந்த புத்திஜீவிகள் பிற்போக்குவாதத்தில் பிழைப்பு நடாத்துபவர்களாக மாறிக்கொண்டிருக்கின்றார்கள்.

இன்று உலகம் நேசிக்கின்ற புரட்சி இவர்கள் அறியாமலேயே வெடித்துக் கொண்டிருக்கிறது.

அரபுகளின் பிற்போக்குவாத பணத்தினால் போஷிக்கப்படும் இவர்கள் புரட்சியின் கனவுகளோடு போர்த்திப் படுத்துக்கொண்டிருக்கும் போது, இவர்களின் கதவுகளைத் தட்டி குறட்டைகளைக் களைத்தவர்கள் யார் தெரியுமா?

அவர்கள் யாரிடமும் பணம் வாங்காத பொது மக்கள். காசுக்காக கொள்கைகளை விற்காத அந்த பொது மக்களின் பின்னால் போராட்டத்திற்கு அணிதிரள வேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

போராட்டம் இவர்களை நீண்ட துயிலிலிருந்து உசுப்பி எழுப்பி இருக்கிறது.
இன்றைய தூனீசியாவும், எகிப்தும் இதற்கு சிறந்த சான்றுகள்.

அரபுகளின் அரசியலை நேசிக்கின்ற, இவர்களின் கதையாடலில் இருக்கின்ற இஸ்லாமிய எழுச்சி போலி என்பது உலகிற்கே இன்று புலனாகியிருக்கிறது.

இவர்களின் கனவு எழுச்சிக்கு பணத்தை வாரி வழங்கி இவர்களைப் பாதுகாத்த அதே அரபு அரசியல்.  தூனீசியாவில் இஸ்லாமிய ஏழுச்சியை காலா காலமாய்  நசுக்கிக்கொண்டிருந்த , நாட்டை விட்டு தப்பியோடிய துரோகியான தூனீசிய தலைவர் பின் அலியையும் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகிறது.

பின் அலியை பாதுகாத்த விஷயத்தில்

இந்த அரபு தேசம் எழுச்சிக்கும்,  வீழ்ச்சிக்கும் உதவி புரிகின்ற ஒரு நாசத்தை செய்து வருகின்றது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறத.

இன்று அடக்குமுறை ஆட்சியாளன் பின் அலியினதும், அந்த அடக்கு முறைக்கு எதிராக போராடிய இந்த இஸ்லாமிய வாதிகளினதும் அனுசரணையாளர் யார் என்ற விபரம் திரை கிழிந்து தெரியவந்திருக்கின்றது.

இந்த அடிப்படையில்பார்க்கும்போது அரபுகளின் வாக்குகளை அல்லாஹ்வின் வாக்காக மதிக்கின்ற ,ஆதாயத்திற்காகஅரபுகளைப் பாதுகாக்கின்ற இந்த ஒருசில “ஷெய்க்கு”களை விட ஜோர்ஜ் கெல்லோவே எவ்வளவோ மேலானவர்.

அநீதிக்கு எதிராக போராடுவது, அதற்காக குரல் கொடுப்பது அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுத்தரும் சிறந்த செயலாகும்.  இதை எந்த லாபத்தையும் எதிர்ப்பார்க்காது ஜோர்ஜ் கெல்லோவே செய்தும் வருகிறார்.

இந்த “ஷெய்க்கு” களோ  அல்லாஹ்வின் திருப்தியை விட தனக்கு ஊதியம் வழங்கும் எஜமானர்களின் திருப்தியை மட்டுமே நோக்காகக் கொண்டு அவர்களை திருப்தி படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.

குளிக்கப் போய் சேறு பூசிக்கொண்ட இந்த புத்தி(?) ஜீவிகளின் கதையை பார்க்கும் போது ..

நா. காமராசன் விலைமாதர்கள் பற்றிய ஒரு கவிதை எனக்கு ஞாபகம் வருகிறது.

“அவர்கள்
நிர்வாணத்தை விற்கிறார்கள்
ஆடை வாங்குவதற்காக..”

அரபுகளின் பணத்துக்காக இஸ்லாம் பேசுபவர்களுக்கும் இந்தக் கவிதைக்கும் நிறையவே தொடர்பிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

அமெரிக்க நலன் சார்ந்த அரபு அரசியலை நேசிப்பவர்களை, அந்த நிதியின் மூலம் இஸ்லாத்தையும் தனது வயிற்றையும் வளர்க்க முயல்பவர்களை
இப்படியும் நோக்கலாம்

அவர்கள்
ஆடைகளை விற்கிறார்கள்
நிர்வாணத்தை வாங்குவதற்காக.
.....?



போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...