Tuesday 23 March 2010

யெஹுதிகளைப் பாதுகாக்கும் சஊதியின் நிகழ்ச்சி நிரல்!

22ம் திகதி காலை. 7.30 மணியிருக்கும் கொழும்பு மாளிகாவத்தை மையவாடி மயான அமைதியில் மூழ்கியிருக்கிறது.


எனக்கு மிகவும் அறிமுகமானவரும், எனது நண்பரொருவரின் சகோதரர் ஒருவருமான றஸீன் மாஸ்டர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சகோ. ரஸீனின் ஜனாஸா நல்லடக்கத்திற்காக மையவாடியில் நண்பர்களொடு காத்திருந்தேன்.

அமைதி உலாவும் இடமான அந்த மையவாடியில் அந்த காலை வேளையில்... அமைதியை சிதைத்துக்கொண்டு.. சர்ச்சையொன்று புகைவது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

தனது சகோதரரின் ஜனாஸாவை  வழமைக்கு மாற்றமாக சுமந்து வரும் முறையில் அதிருப்தியுற்ற எனது நண்பன் ஜனாஸா ஊர்வலத்திலிருந்து விலகி முச்சக்கர வண்டியில் ஏறி  ஜனாஸா வருவதற்கு முன்பே மையவாடிக்கு வந்து விட்டார்.

அவரின் அதிருப்தியை விசாரித்த போது தனது சகோதரரின் ஜனாஸாவை தனது குடும்ப அங்கத்தவர்களின் விருப்பத்தையும் மீறி,  ஒரு கும்பல் “சுன்னத்தான” முறையில் அடக்கம் செய்யப்போவதாக கூறி, சந்தூக்கில் வைத்து, வழமைக்கு மாறாக சந்தூக்கை துணி ஒன்றால் மூடாமல் கபனிடப்பட்ட ஜனாஸா தெரியும் படி ஊர்வலமாக சுமந்து வருவதாக அறிய வந்தது.

Sunday 21 March 2010

இரத்தக் கறைப் படிந்த அமெரிக்க கைகளும் “இளிச்ச”வாயர்களைக் கொண்ட இஸ்லாமிய சமூகமும்!

இரத்தக் கறைப் படிந்த அமெரிக்க கைகளும்
இளிச்சவாயர்களைக்கொண்ட  
இஸ்லாமிய சமூகமும்!




இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்  இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு விஜயம் செய்து அதன்  தலைவர் உட்பட அதன் செயலாளருடன் “மகிழ்ச்சி”கரமாக கருத்துப்பறிமாறுகின்றார்.


முஸ்லிம் உலகை ஆக்கிரமித்து சிதைத்து சின்னாபின்னப்படுத்தும் ஒரு நாடு அமெரிக்கா. அதன் அடாவடித்தனத்தாலும், ஆக்கிரமிப்பாலும், அநியாயத்தாலும்  இராணுவ பலத்தாலும் ஆயிரமாயிரம் முஸ்லிம்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இலடசக் கணக்கானோர் காயங்களோடு கப்றுகளுக்குள் உறங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

அமெரிக்க இராணுவத்தால் கணவன்மார் கொலை செய்யப்பட்டு விதவைகளான ஆயிரக்கணக்கான எங்கள் உடன் பிறவா சகோதரிகள் ஈராக் வீதிகளில் விபசாரத்தை தனது தொழிலாக மாற்றியிருக்கின்றார்கள்.

தாய், தந்தையை இழந்த அனாதைச் சிறுவர்கள் அமெரிக்க இராணுவத்தின் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறார்கள்.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என்ற போர்வையில் அமெரிக்கா வடிவமைக்கும்  குண்டு வெடிப்புகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன.

ஈராக், பலஸ்தீன், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில்  பல உயிர்களை காவு கொள்ள காரணமாய் இருந்ததும் காட்டுமிராண்டித்தன ஆக்கிரமிப்பு அரசியலை முஸ்லிம் நாடுகளில் கட்டவிழ்த்து விட்டு முஸ்லிம்களின் இரத்தத்தையும், அந்நதந்த  நாடுகளின் வளங்களையும்  உறிஞ்சிக் குடிப்பதை குறிக்கோளாய் கொண்டு அதன் ஆக்கிரமிப்புப் போர் ஆரம்பமானது.

அதன் இராணுவ சப்பாத்துகளின் கீழ் நசுங்குண்டு ஈராக் தன் இன்று இறுதி மூச்சை வாங்கிக்கொண்டிருக்கிறது.

இஸ்ரேலின் மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்களை பாதுகாக்கும் அமெரிக்காவின்  வீட்டோ அதிகாரத்தில் சிக்குண்டு பலஸ்தீன் திறந்த வெளிச்சிறையொன்றில் தவித்துக் கொண்டிருக்கிறது.  உணவு, மின்சாரம், தண்ணீர் என்று அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு அவர்கள் வாழ்வுக்காக மன்றாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆப்கான் அழிந்துக்கொண்டிருக்கிறது.

முஸ்லிம்  உலகின் மீது இவ்வளவு அக்கிரமங்களையும் நிகழ்த்திக் கொண்டு ஒரு சில முஸ்லிம் நாடுகளோடும், ஒரு சில  முஸ்லிம் இயக்கங்களோடும், அமைப்புகளோடும் மறைமகமாவும், நேரடியாகவும் கொலைகார அமெரிக்கா நட்பை பேணி வருகிறது.

இந்த அமெரிக்க முஸ்லிம் (?) நட்பின் மூலம் முஸ்லிம் உலகை காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்தை  இந்தக் கைக்கூலி கும்பல்கள்  சாதுர்யமாக செய்தும் வருகின்றன.

Saturday 13 February 2010

பன்றி இறைச்சி தயாரிக்கும் கீல்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் .... உலமா சபையின் ஹலால் மாநாடு 2010.

பன்றி இறைச்சி தயாரிக்கும் கீல்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் ....
கொழும்பில் ...உலமா சபையின் ஹலால் மாநாடு 2010.

உலமா சபையின் ஹலால் பத்வா  விவகாரம் அடிக்கடி இலங்கை முஸ்லிம் சமூகத்தில் சா்ச்சைகளை கிளப்பி வருகின்றது.  கண்மூடித்தனமாக  உலமா சபை கொடுக்கும் பத்வா பல பல்தேசிய நிறுவங்களை  (குறிப்பாக அமெரிக்க, பிரித்தானிய கம்பனிகளை) அதிக லாபமீட்டும்  நிலைக்கு தள்ளியிருக்கிறது.

ஹராமான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும்   இந்த நிறுவனங்களுக்கு இலட்சக் கணக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு பத்வாவை உலமா சபை வழங்கி வருகின்றது.



இது முஸ்லிம்கள் மத்தியில் திட்டமிட்டு ஹராத்தை திணிக்கும்  இஸ்லாத்தின் எதிரிகளின் சூழ்ச்சிக்கு உலமா சபை பலியாகி வருவதை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றது.

2010 ஹலால் மாநாடு என்ற போர்வையில் பன்றி இறைச்சியை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான கீல்ஸ் ஒரு மாநாட்டை ஒழுங்கு செய்திருக்கிறது.  அதற்கு இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதான பாத்திரமேற்றிருக்கிறது.

UTO/Educonsult என்ற ஒரு அமைப்போடு சேர்ந்து உலமா சபை இந்த மாநாட்டை நடாத்த விருப்பதாக பத்திரிகைகளில் விளப்பரப்படுத்தப் பட்டிருந்தன.  இம் மாநாட்டில் பங்கு பற்றுபவர்களிடமிருந்து ரூபா  6000 முதல் 16000 வரை அறவிடப்படவிருப்பதாகவும்  அந்த விளம்பரங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஹலால் ஹராம் என்ற ஷரீஅத்தின் கட்டளைகள் வர்த்தக மயமாக உருவாகி வரும் அபாயத்தையும், மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகள் , மிகவும் தந்திரமாக அவர்களின் பொருட்களை விற்பனை செய்து கொள்வதற்கான ஒரு சந்தையாக  இஸ்லாமிய ஷரீஆவை  பயன்படுத்துவதையும்  இந்த சதிக்கு உலமா சபை தொடர்ந்து பலியாகி வருவதையும் அவாதனிக்கக் கூடியயதாக இருக்கின்றது.

அதேவேளை, அல்லாஹ்வின் சட்டத்தை, ஹலால்  அங்கீகாரத்தை, பத்வாவாகபணத்திற்கு விற்பனை செய்வதை இஸ்லாமிய ஷரீஆ அங்கீகரிக்கின்றதா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றது.

Sunday 10 January 2010

காஸா - பிரச்சினையும் பிராந்திய அரசியலும்!



காஸா - பிரச்சினையும் பிராந்திய அரசியலும்!

பலஸ்தீன் பிரச்சினை சமகாலத்தின் மாபெரும் தார்மீகப் பிரச்சினை என்றார் நெல்சன் மண்டேலா .

பல தசாப்தங்கள் உலகில் மாற்றமடையாமல் இருக்கும் ஒரே தலைப்பு “ மத்திய கிழக்கின் தற்போதைய நெருக்கடி ” என்றார் நோம் சொம்ஸ்கி.

பலஸ்தீன் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை அடையாளப்படுத்த இதனைத் தவிர வேறு ஒரு வார்த்தைகள் அவசியமில்லை.

காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு ஒரு வருடம் நிறைவாகிறது. சுமார் 15 லட்சம் மக்கள் அடிப்படை வசதிகள் முற்றாக மறுக்கப்பட்டு ஒரு திறந்த வெளி சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

உணவு, மருந்து, தண்ணீர், மின்சாரம், கல்வி போன்ற அடிப்படை தேவைகள் அத்தனையும் மறுக்கப்பட்டு அந்த மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

2006ம் ஆண்டு பலஸ்தீன் அதிகார சபைக்கான தேர்தலில் ஹமாஸ் இயக்கம் போட்டியிடடு வெற்றியீட்டியதைத் தொடர்ந்து மேற்குலகம் கடுமையான தடைகளையும் நெருக்குதல்களையும் கொடுத்து ஹமாஸ் அரசை செயலிழக்கச் செய்தது.

ஹமாஸ் பாராளுமன்ற அமைச்சர்கள், அங்கத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் இன்றும் சிறையில் வாடுகிறார்கள்.

ஜனநாயத்திற்காக குரல் கொடுப்பவர்கள், மனித உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் யாரும் இதற்காக ஒரு வார்த்தையும் பேசாமல் மௌனிகளாக இருக்கின்றார்கள்.

அடிப்படை வசதிகளும், அத்தியாவசிய பொருட்களும் முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில் பலஸ்தீன் உலகிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறது. தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஹமாஸ் மீதான மேற்குலகின் இந்த நெருக்குதல்களுக்கு பின்னணியில் மத்திய கிழக்கின் அரசியல் மறைந்திருக்கின்றது. பலஸ்தீனில் இஸ்லாமிய ஆட்சியமைப்பைக் கொண்ட ஜனநாயக ரீதியாக ஏற்படும் பாராளுமன்ற அரசியல் கட்டமைப்பு தமது மன்னராட்சியின் மகுடங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை அரபு நாடுகள் நன்கு உணர்ந்தே இருக்கின்றன.

பலஸ்தீனில் உருவாகும் பாராளுமன்ற அரசியலின் கவர்ச்சி தனது நாட்டு மக்களின் சிந்தனையில் மாற்றத்தை உருவாக்கும் என்ற அச்சம் அரபு நாடுகளுக்கு இருக்கவே செய்கின்றது.

பலஸ்தீனில் உருவாகும் இஸ்லாமிய அடிப்படையிலான பாராளுமன்ற கட்டமைப்பு அமெரிக்க இஸ்ரேல் நாடுகளுக்கு எப்படி அச்சுறுத்தலோ அதே போன்று அந்த பிராந்தியத்திலுள்ள அரபு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாகும்.

இந்த ஜனநாயக அரசியல் கட்டமைப்பை விரும்பாத அரபு நாடுகள் தமது மன்னர் ஆட்சி கட்டமைப்பைக் காத்துக்கொள்வதற்காக வேண்டி, பலஸ்தீன் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் திணித்த பொருளாதார தடைகளை மௌனமாக இருந்தது அங்கீகரித்து வருகின்றன.

காணொளி
"அரபிகளே! பலஸ்தீனத்தை பாதுகாக்க எழுந்து வாருங்கள்!!" - பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் George Galloway.



Tuesday 3 November 2009

ஹராத்தை ஹலாலாக்கும்.......ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா!





அமெரிக்கா ஏகாதிபத்தியம் எங்களை ஆக்கிரமிக்கிறது…
ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா!

ஜம்இய்யதுல் உலமா என்ற இலங்கையின் மார்க்க வல்லுனர்களிள் சபை தொடர்பாக பல சர்ச்சைகள் சமூகத்தில் எழுந்து வருகின்றன. அண்மைக்காலமாக அது வழங்கி வரும் மார்க்கத் தீர்ப்பு ஹராத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக ஹராத்தை இலகுவாக்கக் கூடிய, ஹராத்தை நெருங்கக் கூடிய ஒரு சூழ்நிலையை தோற்றுவித்திருக்கிறது.

இது வழங்கும் ஹலால் பத்வா ஹராம் பற்றிய அச்சத்தை சமூகத்தில் குறைத்து வருகிறது.

Tuesday 15 September 2009

எழுந்துக் கொண்டிருக்கும் பள்ளிவாசல்களும் விழுந்துக்கொண்டிருக்கும் பள்ளிக்கூடங்களும்




பள்ளிவாசல்கள் பளிங்குக் கற்களால் மிளிர்ந்துக்கொண்டிருக்கின்றன. பலமாடிக்கட்டிடங்களாய் விண்ணை எட்ட வளர்ந்துக்கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல்களின் வளர்ச்சி முஸ்லிம்கள் மனதில் ஆனந்தத்தை அள்ளி விதைத்துக் கொண்டிருக்கின்றது.தனவந்தர்கள் பள்ளிவாசல்கள் கட்ட வாரி வாரி வழங்குகிறார்கள்.

பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு வெளிநாட்டு பணம் கூட கோடிக்கணக்கில் வந்து குவிந்துக்கொண்டிருக்கிறது. தெருவிற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அல்லது மூன்று பள்ளிவாசல்கள் என்றும் முளைத்துக்கொண்டிருக்கின்றன். இது நகரத்தின் நிலை. கிராமமப் புறங்களிலும் தொழுகைக்கு ஆள் இல்லாவிட்டாலும் பள்ளிவாசல்கள் மட்டும் பெரிதாக கட்டப்படுகின்றன. காலாலகாலமாய் ஒரு பள்ளிவாசலின் கட்டுக்கோப்பில் வாழ்ந்தவர்க்ள் பல பள்ளிவாசல்களாய் பிரிந்தும் நிற்கிறார்கள். கொள்கை ரீதியலான் பிரிவினை கொடிகட்டிப் பறந்துக்கொண்டிருக்கிறது.

பள்ளிவாசல்கள் இப்படி எழுந்து வரும்போது முஸ்லிம் பாடசாலைகள் பின்தங்கியே நிற்கின்றன. கல்வி தொடர்பான முஸ்லிம்களின் வரலாறு கசப்பானதாகவே இருந்து வருகிறது. காலா காலமாய் முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின் தங்கியவர்களாகவே இருக்கின்றார்கள்.

Tuesday 1 September 2009

ஸக்காத்தின் வீழ்ச்சியும் உழ்ஹிய்யாவின் எழுச்சியும்


ஸக்காத்தின் வீழ்ச்சியும்
உழ்ஹிய்யாவின் எழுச்சியும்

ஸக்காத் ஏழை வரி இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்று.

ஸக்காத் இஸ்லாம் முன்வைக்கும் ஒரு மகத்தான பொருளாதார திட்டமும் கூட. அல்குர்அன் தொழுகையைப் பற்றி பேசும் அனேக இடங்களில் ஸக்காத் பற்றியும் பேசுகிறது.

ஸக்காத் எற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயத்திற்கு அத்திவாரமாகின்றது. குர்ஆனிய சமூகமொன்றில் ஸக்காத் பொருளாதார பலத்திற்கு துணையாக நிற்கிறது.

இன்றைய தஃவா (?) தளத்தில் ஒரு பேசு பொருளாக மட்டும் மாற்றப்பட்டிருக்கும் ஸக்காத்தின் நிலையைப் பற்றி நாங்கள் பேசியே ஆக வேண்டும். ஸக்காத்தின் உயிரோட்டத்தைச் சிதைத்து, சில்லரை காசுகளில் சங்கமமாகும் ஒரு சடங்காக அது இடம்பெற்று வருகிறது. வெறுமனே உச்சரிக்கப்படுகின்ற ஒரு சொல்லாக மட்டுமே அது உலா வந்துக் கொண்டிருக்கிறது.

ஸக்காத்தின் இந்த பின்னடைவான நிலைக்கு அமெரிக்க பூகோள ஏகாதிபத்திய அரசியலே காரணமாகியிருக்கிறது, அந்த அரசியல் தாக்கத்தை செலுத்தியிருக்கிறது.

அந்த அமெரிக்க அரசியல் சஊதி ஆன்மீகம் ஊடாக எங்கள் உள்ளங்களுக்குள் இறங்கிக்கொண்டிருக்கிறது. சஊதி சார்பு இஸ்லாமிய இயக்கங்கள் இந்த வேலையை கச்சிதமாக நிறைவேற்றியும் வருகின்றன. கருத்தாடலோடு மட்டும் ஸக்காத்தை கட்டுப்படுத்தி வைக்கும் அமெரிக்க சஊதி திட்டத்திற்கு இந்த இயக்கங்கள் உறுதுணையாய் நின்று உதவியும் புரிகின்றன.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...